Thursday, January 19, 2017

ப ல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள்.


சல்லிக்கட்டு விவகாரத்தில் நமக்கு  ல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள்.அவை
1. திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்பு சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர் .
2. அரசியல் என்று தலைவர்களின் பொய்யான சூளுரைகளை கேட்டது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
3. தொலைகாட்சிகள் நம்மை எதற்காக பயன்படுத்தினர் என்று புரிய வைத்துள்ளனர்.
4. தமிழனின் பொருள்களை வாங்காமல் அன்னிய நாட்டின் பொருள்களை வாங்கியது எவ்ளோ பெரிய தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
5. தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக வந்தார்கள் என்று புரிய வைத்துள்ளர்கள்.
6. இந்திய நாட்டில் தமிழனின் நிலை என்ன என்று தமிழனுக்கு தெளிவாக புரிய வைத்துள்ளார்கள் .
7. இன்று ஒரு விஷயத்தை அலட்சியம் செய்தால் அதன் விளைவு பிற்காலத்தில் எப்படி அமையும் என்று புரிய வைத்துள்ளார்கள் .
8. தமிழன் என்றால் யார் ? அவனால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்தவர்களுக்கு இன்று நாம் யார் என்று புரியவைத்துள்ளோம் .
9. வளரும் சந்ததியர்களுக்கு நாம் முதலில் என்ன கற்று தரவேண்டும் என்று புரிய வைத்துள்ளனர்.
10. தமிழ் மொழியினை அலட்சியம் செய்ததன் விளைவு தான் இன்று நாம் சந்திக்கும் இந்த தமிழனின் கலாச்சாரத்தினை அழிப்பதற்கான காரணம் என்று புரிய வைத்துள்ளனர்.
தமிழா ! இது வரை நாம் யார் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தோம்.ஆனால் இன்று நாம் யார் என்ற கேள்விக்கு உலகமே பதில் சொல்லும் அளவிற்கு நாம் சென்றுள்ளோம். நமக்கு ஒரு பிரச்சினை என்ற உடன் யார் வந்தார்கள் என்று சிந்தித்து பார் , அவர்கள் நமக்கு வேண்டுமா ? நடிகர்கள்(ஆதரித்தவர்களை தவிர), அரசியல் தலைவர்கள் (ஆதரித்தவர்களை தவிர), அன்னிய நாட்டின் பொருள்கள் , நம்மை முட்டாளாக ஆக்கி கொண்டிருந்த (news 7 & News 18 தவிர ) அனைத்து ஊடகங்கள் , ஆங்கில மொழி , என அனைத்தையும் நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்ற நிலை வந்தால் நிச்சயமாக தமிழன் தலை நிமிர்ந்து உலகை ஆள்வான்.
நன்றாக சிந்தியுங்கள் இந்த தொகுப்பை படிப்பவர்கள் தயவு செய்து நல்லதை எடுத்து கொண்டு , இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமாயின் அதனை சேர்த்தும்,நீக்க வேண்டியதை நீக்கியும் பகிருங்கள். நாம் யார் என்பதை நாம் தான் மற்றவர்களுக்கு கூற வேண்டும் . வாழ்க தமிழ் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...