இந்திய அரசின் "செல்லாது" அறிவிப்பை எதிர்ப்பவர்கள் வெட்கப்படவேண்டும் என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர்.
"நாங்க ஏன் சார் வெட்கப்படனும்.?
உலகின் ஒரே ஒரு ஒப்பற்ற தலைவரும் அவரை சுற்றி இருக்கும் அதி தீவிர சிந்தனையாளர்களும் தான் வெட்கப்பட வேண்டும்.
ATMல் எவ்வளவு சைஸ் ரூபாய் பிடிக்கும் என்று கூட சிந்திக்காத மொக்க சிந்தனையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
கருப்புப் பணத்தை ஒழிக்க 1000 ரூபாயை ஒழித்து, 2000 ரூபாயை கண்டு பிடித்த ராஜதந்திரிகள் வெட்கப்பட வேண்டும்.
ஒரு தேசத்தின் எல்லா மூலைகளுக்கும் முதலில் புதிய 500 ரூபாய் போகனுமா... புதிய 2000 ரூபாய் போகனுமா என்று திட்டமிட தவறிய அதி மேதாவிகள் வெட்கப்பட வேண்டும்.
நாயிடம் கிடைத்த முழுத்தேங்காய் போல், 2000-த்தை கொண்டு அலைபவர்களுக்கு வங்கியாலேயே சில்லறை கொடுக்க முடியாது என்பதை யோசிக்கத் தவறியவர்கள் வெட்கப்பட வேண்டும்.
86 சதவீத நோட்டுகளுக்கு மாற்று நோட்டுகள் அச்சடித்து வினியோகிக்க ஆகும் கால அளவை அனுமானிக்காத அவசர குடுக்கைகள் வெட்கப்பட வேண்டும்.
இருக்கிற சொச்ச நூறு ருபாய் நோட்டுகளும் மாற்றப்பட்டு, பதுக்கப்பட்டால் ATM-களை எப்படி இயக்க முடியும் என்று யோசிக்க மறந்த ஆக்ஸ்போர்டு அறிவாளிகள் வெட்கப்பட வேண்டும்.
ATM-களும், வங்கிக் கிளைகளும் அருகாமையில் இல்லாத கோடிக்கணக்கான கிராம மற்றும் மலைவாழ் மக்களை நினைக்காத புரட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
விதைகளுக்கும், விவசாயத்திற்கும் நாடப்படும் கிராம கூட்டுறவு வங்கிகளின் வாயில்களை அடைத்த தொலைநோக்கு சிந்தனையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
வங்கியில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் புத்தரின் மறு அவதாரம், தேச பகதர்கள் என்று நம்பிய திறமைசாலிகள் வெட்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியில் உள்ளே வெளியே நடத்தப்படும் ஆட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் அதற்கு ஒரு வழி முறை வகுக்காமல் ஆட்டத்தை தொடங்கியவர்கள் வெட்கப்பட வேண்டும்.
எல்லாத்துக்கும் மேல ஒரு நாடே தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை வந்த போது ஒரு "Morale support" க்கு உடன் இருந்து உடனுக்குடன் தீர்வு காணாமல் ஜப்பானுக்கு பறந்த பெரியவர் வெட்கப்பட வேண்டும்.
தேச பக்திக்கும் தனிமனித துதிபாடலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை போன்றவர்கள் வெட்கப்படனும்.

No comments:
Post a Comment