Saturday, January 21, 2017

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை...

உலகத்தில் பயனற்றவை என எழு விசயங்களை வரிசைபடுத்துகிறது நம் பழங்கால இலக்கியமான விவேக சிந்தாமணி.
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.
1. நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்குத் துணையாய் இருக்காத பிள்ளைகள்
2. பசித்த நேரத்தில் கிடைக்காத உணவு
3. தாகம் எடுத்த நேரத்தில் கிடைக்காத தண்ணீர்
4. குடும்பத்தின் வறுமை நிலையை பற்றி கவலை இல்லாமல் மனம்போன போக்கில் செலவுகளைச் செய்து வாழும் பெண்கள்
5. தகுந்த நேரங்களில் தவிர்த்து மற்ற நேரங்களில் தனது கோபத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாத அரசன்
6. தனக்கு வித்தைகற்றுத் தரும் ஆசிரியனின் அறிவுரைகளை மதித்து நடக்காத மாணவன்
7. பாவங்களைப் போக்காத புண்ணியதீர்த்தம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...