ஆதரவு தெரிவித்த மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் நன்றி. முதல் முறையாக உரையாற்றுகிறேன். இந்த உரை அனைவரிடம் சென்று சேரவேண்டும் என்பது என் வேண்டுகோள். தமிழக மக்களை தன் பிள்ளைகளாக ஏற்றவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா. அம்மாவை இழந்து குழந்தைகள் தவிக்கின்றனர். அம்மா நீங்கள் தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும். 1972ல் அதிமுகவை உருவாக்கி, மக்களாட்சியை அமர்த்திவர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்கு பிறகு அம்மா தொடர்ந்து மக்களாட்சியை நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உலகத்தையே அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக மாறியது. இது நீங்குவதற்குள் அடுத்தடுத்த அரசியல் மாற்றம் வந்துள்ளது. பலர் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள். நான் எளிய முறையில், பத்திரிக்கை துறையில் இருந்தவள். எனக்கு குடும்பம் உட்பட சில பொறுப்புகள் இருக்கிறது. ஆனாலும் என்னை அழைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். இனி வரும் காலத்தில் மக்களுக்காக பணியாற்றுவேன். என் தாய் மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுவேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மாவின் ஆசிகளோடு, அவர்களின் பாத சுவடுகளோடு வழிநடந்து மக்கள் பணியில் இறங்குகிறேன். மக்களின் கருத்தை அறிந்து, தொண்டர்களின் கருத்தை அறிந்து புதிய பயனத்தை தொடங்குகின்றேன். எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்தநாளில் என் வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை தொடங்குகிறேன். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காட்டிய வழியில் மக்களையும், தமிழகத்தையும் வழிநடத்த உங்கள் அன்புச்சகோதரியாக, அம்மா ஆற்றிய மக்கள் சேவைகள் தொடரவேண்டும், அம்மாவின் கனவை நினைவாக்கவேண்டும் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். அம்மாவின் மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த நேரத்தில் எனது கடமைகளை நிலைநாட்டிட ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நம் களப்பணியும் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். அம்மா அவர்களின் பிறந்தநாள் முதல் அரசியலில் ஈடுபடும் அடுத்த அறிவிப்பு வெளியிடுவேன். அனைவரின் கருத்தையும் சேகரித்து வருகிறேன். அதன் பிறகு அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். அனைவரின் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அம்மா விட்டுச்சென்ற பணிகளை தொடரவேண்டும். அம்மாவின் பெயர் நிலைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி...
அனைவருக்கும் நன்றி...
No comments:
Post a Comment