சாணக்கியன் தந்த தந்திரம்! (முரண்பாடுள்ள வாழ்க்கையில் முந்திச்செல்ல முப்பது மந்திர குறிப்புகள்)
சாணக்கியன் தந்த தந்திரம்! (முரண்பாடுள்ள வாழ்க்கையில் முந்திச் செல்ல முப்பது மந்திர குறிப்புகள்)
மனிதனாக பிறந்து வளரும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எப்படி யாவது முன்னேறி வெற்றி அடைய
வேண்டும் என்ற எண்ணம், லட்சியம், நோக்கம் இருந்துகொண்டே தான்
இருக்கும். ஆனால் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் பிர ச்சனைகளால் சோர்ந்து, துவண்டு, இறுதியில் அவனால் எதையுமே சாதிக்க முடியாமல் இறந்தே விடுகிறான். அவர்களுக்காகவே அவர்களது முரண்பாடுள்ள வாழ்க் கையில் அவர்கள் முந்திச்செல்ல முப்பது தந்திர குறிப்பு களை அர்த்த சாத்திரம் என்ற நூலில் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளான். இதோ அந்த அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில
கருத்துகள் பற்றிப் பார்ப்போம்.


1. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களு டன் வாழ்வது ஒருகொடிய விஷப்பாம்புடன் வாழ் வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.


3.கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்க ளை ஒரு நாளும் நம்ப கூடாது .
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில்
சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தை களுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித்தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல் லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடு படாமலும்
செல்ல வேண்டாம்.

5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இரு ந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை
தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால்சுரக்கும், அது தாயைபோன்றது எங்கு சென் றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.


9. பிறவி குருடனுக்கு கண்தெரிவதில்லை, அதுபோல் காமம் உள்ளவனு
க் கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி ( கெட்டவிசயம்) தெரியாது, பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியா து. பேராசைகொண்டவனை பரிசு கொடுத்தும், பிடி வாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

11.1 சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

.jpg/220px-%C3%82ne_vu_de_face_(juin_2005).jpg)

15. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில்
பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாகஇருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர் த்தல் ஆகிய 6குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ளவேண்டும். ஒருவன் மேலே சொன்ன 20 விஷயங் களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான்.
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.


16.அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மனவிரக்தியையும், தன் மனைவியின் தீய நடத் தையும், பிறரால் ஏற்படும் கடும்சொற்களையும் வெளி யில் சொல்லமாட்டான். ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமானமுறையில் வரும் வருமா னம் ஆகியவற்றில் திருப்தி அடையவேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையா மல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

18. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடி வாதமாக இருக்காதீர். வளைந்துநெளிந்து வாழ கற்றுக் கொ ள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

20. சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்குமான் கொம்புகளோ,
யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங் க வேண்டும். அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும்.
பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

21. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்க ளை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
22.அழகு, ஒழுக்கம்இல்லாத செயல்களால் கெட்டுபோகும், நல்ல குலத்
தி ல் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டுபோகும். முறையாக கற்காத கல்வி கெட்டுபோகும். சரியாக பய ன்படுத்தாத பணம் கெட்டு போகும். கல்வி கற்றவனை மக்கள் மரியா
தை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கி ன்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.



24. மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவ
ன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய 7 நபர்களும் அயர்ந் து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இரு ந்து உடனடியாக எழுந்து செயல்படவேண்டும். பாம்பு, அரசன், புலி, கொட்டும் தேனீ, சிறுகுழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

25. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என் றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவ னாகிறான். கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரிஆவா ன், தவறுசெய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆ வான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக் கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
26. கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாத வன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
27. வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ் வதை விட
புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத் தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் கா லையில் ஒவ் வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலை ப்படாமல் வாழ வேண்டும்.


29. வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வள
ர்த்தாலும் அதன் கசப்பு தன்மைமாறாது. அதுபோல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தா லும் அறிவு வராது. சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அதுபோல் எத்த னைமுறை புனிதநதிகளில் குளித்தாலும் மனத்தூய் மை வராது.
30.கல்வி கற்கும் மாணவன் இந்த 8 விஷயங்களில் கட்டுப் பாடுடன் இருக்கவேண்டும். அவை காமம், கோபம், பேரா சை , இனிப்புஉணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்றுவரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்த னை பாராட்டு கிறோம். தேனீக்க
ளை பாத்து கற்று கொள்ளு ங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோஒருவன் ஒருநாள் அவ ற்றை அழித்து தேனை தூக்கிச் செல்கிறான். அதுபோல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல் வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களையும் தர்ம ங்களையும் செய்யுங்கள். (chanakya quotes for live successfully without worries )

No comments:
Post a Comment