Thursday, January 19, 2017

மெரினாவில் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பாக குவிந்த மக்கள் பேரலை... மிரளும் வங்கக் கடல்!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 Students are coming to Marina at night times also
மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...