Sunday, January 15, 2017

நீ எப்படிப்பட்டவள் என்பதை இப்போது முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன்.



அன்புத் தோழி சசிகலா நடராஜனுக்கு உன்னால் நிம்மதியை இழந்த உன் தோழி அம்மு எழுதிக் கொண்டது,
நீ நலமாய் இருப்பதாக எனக்கு இங்கே வந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டேன், பூமியில் நான் இருந்த போது அடிக்கொருதரம் நீ நலமா என்று விசாரிப்பாய், ஆனால் நான் அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் என்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட நீ பேசவில்லை, என்னசெய்வது நான் உன்னை முழுமையாக நம்பினேன் ஆனால் நீ எப்படிப்பட்டவள் என்பதை இப்போது முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன்.
எனது சொந்த அண்ணன், அண்ணி, மறறும் அவர்களுடைய குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்தாய், அப்போது எனக்கு உன்னுடைய செயல்பாடுகள் புரியவில்லை. 

உன்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராக எனது இல்லத்தில் சேர்த்து எனக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று நடித்து முழுவதுமாக என்னை ஏமாற்றி விட்டாய்
நான் பாசமாக வளர்த்த எனது அண்ணன் மகள் தீபாவை என்னிடமிருந்து பிரித்து அவர்கள் குடும்பமே என்னை விட்டு முற்றிலுமாக விலகும் படி எனது மனநிலையை முற்றிலுமாக மாற்றி எந்த ஒரு செய்தியையும் எனது கவனத்துக்கு கொண்டு வராமல் செய்து விட்டாயே இது என்ன கொடூரம் !
நான் உனக்கு அரசியலிலோ, கட்சியிலோ எந்த விதமான பொறுப்புகலோ கொடுக்கவில்லை, எனது வீட்டில் வேலை செய்யத்தான் நியமித் தேன்.
ஆனால் என் கல்லறை காயும் முன்னே பதவி, புகழ், என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க ஒதுக்கிவைத்த சிலரோடு சேர்ந்து கொண்டு நீ செய்யும் செயல்களை எல்லாம் நான் மிகுந்த மன வேதனையுடன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் உன்னை நம்பி நான் கெட்டது போதும்.
இப்படிக்கு
உன் தோழி என்று சொல்ல வெட்கப்படும்
அம்மு(ஜெயா).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...