உலகத்துக்கு பண்பாடு
கலாச்சாரத்தை கற்றுக்
கொடுத்தவன் தமிழன்
கலாச்சாரத்தை கற்றுக்
கொடுத்தவன் தமிழன்
கோலோச்சும் அரசன்
தன் தர்மத்தை உணர்ந்து
அரசாட்சி செய்தான்
தன் தர்மத்தை உணர்ந்து
அரசாட்சி செய்தான்
பாரம்பரிய நெறிமுறைகளை
வகுத்து கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும் வளர்த்து
மக்கள் சமுதாயம் தழைத்தோங்க
வழி வகுத்தான்
வகுத்து கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும் வளர்த்து
மக்கள் சமுதாயம் தழைத்தோங்க
வழி வகுத்தான்
இறைப்பணியில் மிகுந்த
நாட்டம் கொண்ட அரசன்
மக்களுக்கு இறைவனாகவே
விளங்கினான்
நாட்டம் கொண்ட அரசன்
மக்களுக்கு இறைவனாகவே
விளங்கினான்
அஞ்சா நெஞ்சம் படைத்த
தமிழன் அக்கிரமங்களை
எதிர்த்து ஆர்ப்பரித்தான்
தமிழன் அக்கிரமங்களை
எதிர்த்து ஆர்ப்பரித்தான்
அடக்கு முறை கண்டு
வெகுண்டெழுத்து
நீதி நியாயத்தை பெற
சூளுரைத்தான்
வெகுண்டெழுத்து
நீதி நியாயத்தை பெற
சூளுரைத்தான்
உரம் மிக்க தமிழன்
உள்ளம் என்றும்
உரிமைக்கு போராட
தயங்கியதில்லை
உள்ளம் என்றும்
உரிமைக்கு போராட
தயங்கியதில்லை
வஞ்சகம் செய்வோரை
தன் நெஞ்சுரத்தால்
வென்றான்
தன் நெஞ்சுரத்தால்
வென்றான்
பல சாம்ராஜ்ஜியங்களையும்
வென்ற தமிழ் மன்னர்கள்
தமிழனின் கலாச்சாரத்தையும்
பாரம்பரியத்தையும்
மேலோங்கச் செய்தனர்
வென்ற தமிழ் மன்னர்கள்
தமிழனின் கலாச்சாரத்தையும்
பாரம்பரியத்தையும்
மேலோங்கச் செய்தனர்
தமிழ் மண்ணின் வீரம்
தமிழனின் குருதியில்
கலந்து அனலாய்
வெளிப்பட்டது
தமிழனின் குருதியில்
கலந்து அனலாய்
வெளிப்பட்டது
வீரத் தமிழனின் வரலாறு
அனைவரையும் பிரமிக்க
வைத்தது
வைத்தது
தமிழா உன் புகழ் இந்த
தரணியில் பரவட்டும்
தரணியில் பரவட்டும்
தமிழுக்கு இவ்வுலகம்
தலை வணங்கட்டும்🙏
தலை வணங்கட்டும்🙏
No comments:
Post a Comment