அனுமன் சாலிஸாவின் மகிமை.......!!!
ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே... எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றார்.
நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!
புத்தகத்தில் படித்தது
No comments:
Post a Comment