கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மினரல்ஸ், பி காம்ளெக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சிறிதளவு விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்
இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மினரல்ஸ், பி காம்ளெக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சிறிதளவு விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்
சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, சளிப்பிடித்தல், இருமல் போன்ற நோய்களை தீர்ப்பதில் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
பாகற்காயின் சாற்றினை தினந்தோறும் குடித்து வந்தால் கல்லீரல் வலுப்படும், மேலும் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
பாகற்காய் மற்றும் அதன் இலைகளை சூடான தண்ணீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
பாகற்காயை தினமும் உணவாக உட்கொண்டால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள் மற்றும் ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை நீங்கும்.
இன்சுலின் என்ற ஒருவகை வேதிப்பொருள் பாகற்காயில் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் அது மிகவும் செரிமானத்திற்கு உதவுகிறது எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு பாகற்காய் சிறந்த மருத்துவப் பயனாக பயன்படுகிறது. பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் நீக்கப்பட்டு இதய நோய் வருவதை தடுக்கிறது.
புற்றுநோய் செல்கள் பல மடங்கு நம் உடம்பில் பெருகி வருவதை பாகற்காய் தடுக்கிறது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் பாகற்காயில் அதிக அளவு நிறைந்துள்ளது, எனவே இது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது.

பாகற்காய் மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிபடுத்த உதவுகிறது.
இதன் இலை சாற்றுடன் நல்லெண்ணைய் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
No comments:
Post a Comment