Monday, January 23, 2017

உதறித் தள்ளி வெளியேறுங்கள்.


ஒரு விவசாயியின் வயதான கழுதை அவனது தோட்டத்தில் உள்ள ஆழமான வறன்ட கினற்றில் விழுந்து விட்டது !
அதை கவனித்த விவசாயி அதை காப்பாற்ற எவ்வளவோ முயற்ச்சித்தும் முடியவில்லை இருட்டிவேறு விட்டது !
விடிய விடிய யோசித்தும் ஒரு வழியும் அவனுக்கு தெரியவில்லை !

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்ச்சியும் அந்த கழுதையின் விலையைவிட அதிகம் செலவு வைக்க கூடியதாய் இருந்தது .
அந்த பாழடைந்த கினறு எப்படியும் மூடபட வேண்டிய ஒன்றுதான் தவிற அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை செலவு செய்து காப்பாற்றுவதும் வீண வேலை என்று முடிவு செய்த அவர் கழுதையுடன் அப்படியே கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தார் !
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர் சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர் !
கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது .ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளிக் கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கி விட்டது !
அரைமணி நேரங்கள் மண்ணை அள்ளி கொட்டியவுன் கிணற்றுக்குள் விவசாயி எட்டிப் பார்க்க அவர் பார்த்த காட்சி அவரை வியப்பிலாழ்த்தியது !
ஒவ்வொறு முறையும் மண்ணை கொட்டும்போதும் கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு மண்ணை கிழே தள்ளி அந்த மண்ணிண்மீதே நின்று வந்தது !
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது !
இவர்கள் மேலும் மேலும் மண்ணை போடப் போட கழுதை தனது முயற்ச்சியை கைவிடாது உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அந்த மண்ணின் மீதே நின்று வந்தது !
கழுதையின் இந்த இடைவிடாத முயற்ச்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்புற்கே வந்து விட்டது !
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் கனைத்த கழுதை ஓரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்க்குள் சென்று மறைந்தது !
கதை சொல்லும் நீதி..
====================
வாழ்க்கை பல சந்தர்பங்களில் இப்படிதான் நம்மை படுகுழியில் தள்ளி பலரால் தரமற்ற பேச்சு என்ற குப்பைகளையும் பழிசொற்கள் என்ற மண்ணையும் நம்மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும்! ஆனால் நாம்தான் இந்த கழுதைபோல தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் கொண்டு அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும் ! வந்தால்தான் வானமும் வசப்படும் ! வாழ்க்கையும் வசந்தமாகும் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...