ஜல்லிக்கட்டுக்கு தடை… நிரந்தரமாக நீக்கும் வரை போராட்டம் தொடரும்! ஜல்லிக்கட்டு அறப்போராளிகள் அதிரடி
ஜல்லிக்கட்டுக்கு தடை… நிரந்தரமாக நீக்கும் வரை போராட்டம் தொடரும்! ஜல்லிக்கட்டு அறப்போராளிகள் அதிரடி
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டா என்ற அமைப்பை இந்தி யாவில் இருந்தே
வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கடந்த 6 நாட்களாக சென்னை மெரினாவில் அறப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகி றது. இதன் தாக்கமாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இந் த அறப்போராட்டம் தீயாக பரவி பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவராலும் கவரப் பட்டு அவர்களும் அவர்கள் வாழும் நாடுகளிலேயே ஜல்லிக்கட்டு தடை நீக்குவதற்கும், பீடா அமைப்பு தடை செய்யவும் பல இடங்களில் போரா ட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதுவும் சென்னை மெரினா வில் தொடங்கிய இளைஞர்களின் எழுச்சி, பொதுமக்களின் ஆதரவு, பெண்களின் ஒத்துழைப்பும் உலக அரங்கில் நமது தமிழ்நாட்டையே தலை நிமிரச் செய்துள்ளது.
இந்த அறப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதல்வர், கடந்த இருதினங்களுக்கு முன்பு தில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து, ஜல் லிக்கட்டு தடை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பிரதமர் அவர்கள், இவ்விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க இயலாது என்றும் இவ்விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இரு க்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார்.
அதன் காரணமாக ஜல்லிக்கட்டு தடை நீக்குவதற்கான அவசர சட்ட வரைவினை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியது. மத்திய சட்ட அமைச்சகமும் சில திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்தது. பிறகு ஜனாதிப தியின் ஒப்புதல் பெற்றவுடன் இன்று மாலை ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வந்து இச்சட்டத்தை பிறப்பித்தார். இதனை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஊடகம் மற்றும் பத்திரி கை மூலமாக தெரிவித்தார். இந்த அவசர சட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்கிறது.
ஆனால் இந்த அவசர சட்டத்தை ஏற்கவே முடியாது; எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் என்கின்றனர் அறப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்க ள். மேலும் ஒவ்வொரு முறையும் ரோட்டுக்கும் கோர்ட்டுக்கும் நாங்கள் செல்ல முடியாது; ஏனெனில் அவசர சட்டம் 6 மாதத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். நிரந்தரமாக எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் வரை தங்களது போராட்டம் ஓயப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்ததோடு வாடிவாசலை தூய்ப்படுத்த வந்த கனரக இயந்திரங்களை திருப்பி அனுப்பி வாடி வாச லில் அமர்ந்து தர்ணா வும் செய்து வருகின்றனர் அலங்காநல்லூர் மக்கள். இதனிடையே மதுரையில் மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் இன்று ஜல்லிக் கட்டு போட்டி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அங்கே தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் சென்னை மெரினாவில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்களின் அறப்போராட்டம் தொடரும் என்றும் நாங்கள் மாணவர்கள் எங்களை ஏமாற்ற முடியாது என்றும் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளையின் பெயரை நீக்க வேண்டும் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் தமிழக முதல்வரு ம் பிரதமரும் ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க ஆவன செய்ய வேண்டும் என்பது சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment