நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற மாநில அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு!
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கடந்த 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை நன்கொடை பெற்ற மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் மாநில கட்சிகளில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி 819 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேபோல் 203 கோடி ரூபாய் நன்கொடை பெற்று திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையடுத்து, 165 கோடி ரூபாய் நன்கொடை பெற்று அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. தேசிய கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ் கட்சி 3,982 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதல் இடத்தில் உள்ளது.3,272 கோடி ரூபாய் நன்கொடை பெற்று பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 763 கோடி ரூபாய் பெற்று தேசிய அளவில் அதிக நன்கொடை பெற்ற மூன்றாவது கட்சியாக உள்ளது.
No comments:
Post a Comment