ஜெயலலிதாவை புதைத்த இட மண் காயும் முன் சசிகலாவை பொது செயலாளராக்கிய சொந்தங்கள் முதல்வர் பதவி ஏற்கவும் மிகுந்த நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நாள் செல்ல செல்ல பன்னீருக்கு மட்டுமல்ல தீபாவுக்கும் ஆதரவு பெருகிவிடும் திடீரென அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட நினைத்தால் கட்சி, ஆட்சி மட்டுமல்ல சொத்துக்களின் மீதான பிடிப்பும் நம்மை விட்டு போய்விடும் என தொடர்ந்து எச்சரிக்கை செய்துவருகின்றனர். ஆட்சி பொறுப்பேற்க மிகுந்த தயக்கம் காட்டி வரும் சசிகலா தனிப்பட்ட முறையில் ஜெவுக்கு ஆலோசனை சொன்னவர்களில் சிலரிடம் இது குறித்து பேசியுள்ளார். அவர்கள் இன்னும் சில காலம் பொறுமைகாப்பது நலம் என சொல்வதால் யார் சொல்வதை கேட்பது என மிகுந்த குழப்பத்துடன் உள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனோ "சசிகலா முதல்வரானவுடன் முதல் உத்தரவாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தால் நிலைமை உடனே சாதகமாகும்" என தன்னை சந்திக்க வருபவர்களிடம் சொல்லி வருவது தனி அரசியல்.
டெய்ல் பீஸ்: அதிமுகவினர் மத்தியில் பன்னீருக்கு முதல் இடமும், தீபாவுக்கு இரண்டாமிடம் என்பது மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய சர்வே முடிவுகளின் நிலை!
No comments:
Post a Comment