Thursday, January 19, 2017

மெரீனா - Day 2

1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.
2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. 'அவர்களை பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ'ன்னு சொல்லிட்டாய்ங்க :)
3) 'நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க'ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.
4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.
5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு.
6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.
7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து 'பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்க குடுத்த காசு" ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல்லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.
8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வர கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் 'We Do Jallikkattu' என்று எழுதியிருந்தது.
9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாக சப்ளை செய்தார்கள்.
10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களை பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், 'நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க' னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.
11) இவர்தான் நம்ம சூ சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.
12) ஓபிஎஸ், மோடி படங்களை தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.
13) 'பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா', 'குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா', 'பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே', 'சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா', 'மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு' இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))
14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள்.
15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.
16) பின்னால் இருந்தவன் 'பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்' என்றான். 'ஊரே பாத்துருக்குமேடா' என்றவுடன் 'அய்யய்யோ' என்றான்.
17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.
18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் 'வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் 'ஐஸ்மோர் வேண்டும்' என்று கத்தினான்.
19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, மைக்கில் பேசியவன் " பின்னாடி போ நண்பா. கடல் வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு" என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.
20) தாகம் தீர்க்க கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது
21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு குடை பிடித்தார்கள்.
'3 மாசப்புள்ள நமக்காக போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ? ' னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.
இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும், நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...