பழனியில் சில காலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதி அடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூஜித்து வந்த புவனேஸ்வரி அன்னையின் திருவுருவம் பழனி ஆண்டவர் சன்னிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும், புவனேஸ்வரி அம்மன் சன்னிதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
போகருக்குப் பின் அவரது சீடர் புலிப்பாணியும் அவருக்குப் பின் அவர்களது மரபில் வந்தோரும் திருமலை நாயக்கர் காலம் வரை பழனி முருகனை பூஜித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
போகர் இயற்றிய நூல்களின் பட்டியல் அகத்தியரின் சௌமிய சாகரத்தில் காணப்படுகின்றன.
அவை:- போகர் 12000, போகர் சப்த காண்டம் 7000, போகர் நிகண்டு 1700, போகர் வைத்தியம் 1000, போகர் வைத்தியம் 700, போகர் சரக்கு வைப்பு 800, போகர் ஜனன சாகரம் 550, போகர் கற்பம் 360, போகர் உபதேசம் 150, போகர் இரணவாகடம் 100, போகர் ஞான சாராம்சம் 100, போகர் கற்ப சூத்திரம் 54, போகர் வைத்திய சூத்திரம் 77, போகர் முப்பு சூத்திரம் 51, போகர் ஞான சூத்திரம் 37, போகர் அட்டாங்க யோகம் 24, போகர் பூஜா விதி 20.
மேற்கண்ட நூல்களுள் போகர் 12000 மற்றும் இரணவாகடம் 100 என்னும் இரு நூல்கள் மட்டும் கிடைக்கவில்லை.
போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார்.
இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகள் அனைத்தும் சதுரகிரி தலப்புராணத்துள் கூறப்பட்டவை.
தியானச் செய்யுள்
சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு:
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே:
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே:
நவபாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க காக்க…
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே:
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே:
நவபாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க காக்க…
ஸ்ரீ மகா போகர் சித்தர் பூஜை முறைகள்
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து, அதன் முன் மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி, ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின் வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி !
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி !
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி !
4. ப்ரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி !
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி !
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி !
7. மூலிகை, புஷ்பங்களால், அர்ச்சிக்கபடுபவரே போற்றி !
8. ஆம், ஊம் என்ற பீஜாக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி !
9. பசும்பால் பிரியரே போற்றி !
10. நவபாஷானம் அறிந்தவரே போற்றி !
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி !
12. நாகதேவதைகளால் பூஜிக்கபடுபவரே போற்றி !
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி !
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி !
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி !
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகா போகர் சுவாமிகளே போற்றி போற்றி !!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி !
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி !
4. ப்ரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி !
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி !
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி !
7. மூலிகை, புஷ்பங்களால், அர்ச்சிக்கபடுபவரே போற்றி !
8. ஆம், ஊம் என்ற பீஜாக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி !
9. பசும்பால் பிரியரே போற்றி !
10. நவபாஷானம் அறிந்தவரே போற்றி !
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி !
12. நாகதேவதைகளால் பூஜிக்கபடுபவரே போற்றி !
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி !
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி !
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி !
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகா போகர் சுவாமிகளே போற்றி போற்றி !!
இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி”
என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்ய வேண்டும்.
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி”
என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்ய வேண்டும்.
ஸ்ரீ போகரின் பூஜை முறைகள்
இவர் நவகிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ் கண்ட பலங்கள் கிடைக்கும்.
1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்தவீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து, அவருக்கு செவ்வரளி பூக்களால் பூஜை செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும்.
ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி போற்றி !!
No comments:
Post a Comment