இன்னைக்கு எல்லாருமே கேட்கிற ஒரு கேள்வி , இந்த போராட்டம் வெற்றி பெறுமா ??!!! என்னை கேட்டால், இந்த போராட்டம் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டது !!! It's all about conveying a message!!! அத நாம ரொம்ப அழுத்தமாவே சொல்லிட்டோம் !!!
நாம நினைச்ச முடிவ எடுக்கலாம், இந்த முட்டாள் மக்கள் என்ன செய்ய போறாங்கனு நினைச்ச அரசியல்வாதிகளுக்கு, தட்டிக்கேட்க ஒரு கூட்டமே இருக்குனு ஒரு பயத்த குடுத்தாச்சு !!!
நாம என்ன சொன்னாலும் நம்ம ரசிககுஞ்சுகள் நாக்க தொங்க போட்டுட்டு தலை ஆட்டுவாங்கனு நினைச்ச நடிகர் நடிகைகளுக்கு, நாம அப்படி இல்லனு அவங்கல ஓட விட்டு காட்டியாச்சு !!!
நம்ம சொல்லுரதுதான் செய்தி, எவன் கேள்வி கேட்க போகிறான்னு நினைச்ச சில சுய நலம் பிடித்த ஊடகங்கள, களத்தில் அடிச்சு விரட்டி பாடம் புகட்டியாச்சு !!!
ரெண்டு மிரட்டு மிரட்டினா ஓடிடுவாங்கனு இளக்காரமா நினைச்ச போலீசுக்கு, நாம ஒரு இரும்பு நெஞ்சம்னு காட்டியாச்சு !!!
தமிழனுக்கு எதாவது ஒண்ணுனா, எம் இளைஞர் படை ஜாதி மத வேற்றுமை பாராமல் ஒன்றுகூடும்னு நிரூபிச்சாச்சு !!! தமிழன் திருப்பி அடிப்பான்னு உணர்த்தியாச்சு !!!
இந்தியாவயே ஆக்கிரமித்த முகலாய பேரரசாலேயே கைப்பற்ற முடியாத எம் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்களின் மரபணு இன்னும் எம் இரத்தத்தில் கலந்துள்ளது !!! அதன் வீரியத்தை வெளிக்காட்டினால் எதிர்த்து நிக்க யாராலும் இயலாது !!! ஆனால் அறநெறி போராட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை யாம் எப்போதும் விட்டு விட மாட்டோம் !!!
இனி எம் மண்ணிற்கும் தமிழனுக்கும் எதிராக வரும் ஒவ்வொரு நடவடிகைக்கும் நாங்கள் வீறுகொண்டு எழுவோம் !!! எம் போராட்டம் தொடரும்💪💪💪
தமிழன்னை வாழ்க 🙏
No comments:
Post a Comment