Thursday, January 26, 2017

தமிழக அரசியலில் தீபா தேறுவாரா?

தீபா தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். சில பேருக்கு அவர் பொட்டு வைக்க வில்லை யே அதனால் அவர் கிறிஸ்துவர் தான் எனவே அவரை
ஏற்க மாட்டோம் என்று சொல்கிறார்கள்.இதைஓரங்கட்ட
வோ என்னவோ இன்று குட்டி மஞ்சள் பொட்டு டன் தீபாவோடு கிறிஸ்துவர் என்று சொல்லப்பட்ட அவர்
கணவர் மாதவன் சந்தனம் கலந்த குங்குமப்பொட்டு வைத்து நிருபர்களை சந்தித்தார்கள்.

ஜெயலலிதா இறந்து போனதால் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகி உள்ளது.அந்த வெற்றிட த்தை நிரப்புவரை சுற்றியே இன்னும் பத்தாண்டுகளுக்கு
தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கும்.இப்போதைய நிலையில் ரஜினியே நினைத்தாலும் அந்த வெற்றிடத் தை இனி நிரப்ப முடியா து.
காற்று எந்த ஒரு வெற்றிடத்தையும் பூமியில்விட்டு வைப்பதில்லை .அது போல காலமும் அரசியலில் வெற்றிடத்தை விட்டு வைப்பதில்லை.யாராவது ஒருத்த ரை தள்ளி விட்டு அந்த இடத்தை நிரப்பிவிடும்.இரண்டு மாதங்களுக்கு முன்புவரை ஜெயலலிதாவுக்கு ஒரு
அண்ணன் மகள் இருக்கிறார் என்று தமிழகத்தில் 90 சதவீத மக்களுக்கு தெரிந்து இருக்க நியாயமில்லை.
ஆனால் இன்று பாருங்கள்..ஜெயலலிதாவின் கனவை நினைவாக்க என்னுடைய அரசியல் பயனத்தை துவங்கி
விட்டேன் என்கிறார்.இது தமிழக அரசியலுக்கு கிடைத் து ள்ள ஒரு நல்ல மூயற்சி தான்.முற்றிலும் எந்த ஒரு ஊழல்குற்றசாட்டும் இல்லாத ஒரு தலைமைக்கு மக்கள் மிகசிறந்த ஆதரவு கொடுப்பார்கள்.என்பதை எம்ஜியார் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரவேற்ப்பில் இருந்து
தெரிந்து கொள்ளலாம்.
அதிமுக என்பது எந்த ஒரு சுய சிந்தனையும் இல்லாமல்
கண்ணை மூடிக்கொண்டு கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் கட்சி.இவர்களுக்கு தெரிந்தது அதிமுக
தலைமை மட்டுமே.சசிகலாவின் தலைமையில் அந்த
கூட்டம் இடம்பெயரும் என்ற சூழல் உருவாகி வந்த
நிலையில் தீபாவின் வருகை அந்த தொண்டர்களை
மீண்டும் அதிமுகவில் உயிர்ப்புடன் தக்க வைத்துள்ளது.
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.அதிமுகவிற்கு பெரி தாக கொள்கை எதுவும் கிடையாது.கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கொள்கைதான் இருந்தது.மக்களும் இதை ஏற்றுக் கொண்டே அதிமுகவிற்கு வாக்களித்து வந்தார் கள். ஏனெ ன்றால் தீயசக்தியை வளரவிட கூடாது என்பதேமக்களின் விருப்பமாக இருந்து வந்தது.
கருணாநிதி அரசியலில் இருந்து விலகவும் தமிழகத்தில்
அதை விட பெரிய தீயசக்தி சசிகலா வந்துவிட்டார்.இந்த
நேரத்தில் தான் மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
சசிகலா தலைமையில் உள்ள அதிமுகவை விட ஸ்டா லின் தலைமையில் உள்ள திமுக பெட்டர் என்கிற கருத் து உருவாகி வந்து கொண்டிருந்தது..
நல்ல வேளை தீபா வந்துவிட்டார்,தீபாவிற்கு அதிமுக வின் தொண்டர்கள் ஆரம்ப கட்டத்திலேயே ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.வரும் காலங்களில் தீபாவின் மாநிலம் தழுவிய பொதுக்கூட்டங்கள் நடக்கும்
பொழுது இந்த ஆதரவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
இப்பொழுது அதிமுகவில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் கூட தீபா தலைமையில் அணி திரள ஆரம்பிப்பார்கள் உங்க ளுக்கு ஒரு சந்தேகம் வரலாம் நேற்று வரை யா ரென்றே தெரியாத தீபா பின்னால் ஒரு கூட்டம் கிளம் புமா என்று சந்தேகம் வரலாம்.தீபாவிற்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அவரை இயக்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் தீபா டெல்லி சென்று மோடியை சந்திப்பார்
திமுகவில் இருந்து எம்ஜியாரை வெளிவர வைத்தது
இந்திராகாந்தி.அடுத்து ஜெயலலிதாவை தமிழக
அரசியலில் நிலைக்க வைத்தது ராஜீவ்காந்தி.அதே மாதிரி தீபாவை வைத்து தமிழக அரசியலில் பிஜேபியை பலப் படுத்தினார் மோடி என்று நாளைய வரலாறு சொல்லும் .
இன்றைய சூழலில் மக்கள் ஊழல் இல்லாத ஒரு புதிய
தலைமையை விரும்புகிறார்கள்.மூன்றாவது நான்கா வது அணிக்கெல்லாம் தமிழ்நாட்டில் வேலை இல்லை. அதிமுக அணி அடுத்து திமுக அணி இது தான் தமிழ்நா ட்டின் இப்போதைய தலைஎழுத்து
.
இப்போதைய சூழ்நிலை க்கு பிஜேபியால் தனித்து இய ங்க முடியாத நிலையில் தீபா தலைமையில் உருவாகும் அதிமுகவுடன் பிஜேபி இன்னும் சில கட்சிகள் நிச்சயம் சேரும் பொழுது திமுக கூட்டணி தூக்கி வீசப்படும். அதி முக பிஜேபி கூட்டணி அரியணையில் அமரும்.
ஆந்திர அரசியலில் ராமராவ்க்கு கடைசி காலத்தில் பணிவிடை செய்து மனைவியான சிவபார்வதி யை ராமராவின் மருமகன் சந்திரபாபுநாயுடு அரசியலில் இருந்து அப்புறபடுத்தவில்லையா அதே மாதிரி தீபாவும்
சசிகலாவை அரசியலில் இருந்து தூக்கி வீசுவார்.
சிவபார்வதியிடம் இருந்த போலிக்கண்ணீரும் சசிகலா வின் போலிக்கண்ணீரும் ஒன்றே.இரண்டும் அதிகாரத் தை..கைப்பற்ற நடத்தப்பட்ட நாடகம்.அதே மாதிரி சந்திர பாபுநாயுடுவின் தீர்க்கமும் தீபாவின் நிதானமும் கிட்ட
தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறது.ஆந்திர அரசியலில்
மருமகன் ஜெயித்தார் என்றால் தமிழக அரசியலில் மரு மகள் ஜெயித்தார் என்று நாளைய வரலாறு சொல்லும்.
புதிய கட்சி, புதிய கட்சி என்று யாரும் புரளியைக் கிளப்ப வேண்டாம். அ.இ.அ.தி.மு.க. வும் இரட்டை இலையும் ஒன்னரை கோடி தொண்டர்களுக்கானது. கட்சியை யார் வழிநடத்த வேண்டுமென்பதை, ஒன்னரை கோடித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமேயொழிய மூவாயிரம் பேர் கூடி யாரையும் கட்சியின் பொதுச் செயளாளராக முடிவு செய்ய முடியாது. என்றைக்கும் தீபா வே கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வழி நடத்தப் போகிறார். எனவே புதிய கட்சி புதிய சின்னம் என்பதை விட்டொழியுங்கள். தீபா அவர்களின் கட்சி அ.இ.அ.தி.மு.க. அவரின் சின்னம். இரட்டை இலை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...