Wednesday, January 25, 2017

இனிய காலை வணக்கம்...Happy Republic Day....


கோபம், ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள உணர்வுதான். ஏமாற்றத்தின் வெளிப்பாடே கோபமாக வெளிப்பாடே கோபமாக வெளியாகிறது.
மனவலிமை குறைந்தவர்கள், உடல்வலிமை குறைந்தவர்கள், பொறுமையில்லாதவர்கள், காமத்திற்கு அடிமையானவர்கள், அளவிற்கதிகமாக கோபப்படுகிறார்கள்.
பிறரிடம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள், பிறருக்கு நிறைய உதவி விட்டதாக எண்ணுபவர்கள், ‘ தான் மட்டும் உயர்ந்தவன் ‘ என்ற கர்வம் உள்ளவர்கள் அதிகமான கோபத்தை அடைகிறார்கள்.
கோபப்படும் பழக்கம் அதிகம் உள்ளவர்கள் வீண் பிடிவாதம் கொண்டவர்கள்; சில தவறுகளை செய்துவிட்டு, அவை தவறு என தெரிந்தபின்னரும், சரிபடுத்திக் கொள்ள கெளவரம் இடங்கொடுக்ககாமல், தவறுகளின் தொடர்சியான பாதிப்புகளையும் அனுபவிக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை பெற்றவனே. அதனால் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகள் மாறுபட்டே இருக்கும். இதை உணராமல், பிறர் நம் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறார்களே என ஆதங்கப்படுவது அறியாமையாகும்.
கோபம் தவிர்ப்போம்....
இனிய காலை வணக்கம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...