Saturday, January 28, 2017

ஜல்லிக்கட்டு… இமாலய எழுச்சியுடன் வெற்றிபெற வித்திட்ட‍ மாணவர்களுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டு…  இமாலய எழுச்சியுடன் வெற்றி பெற வித்திட்ட‍ மாணவர்களுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டு…  இமாலய எழுச்சியுடன் வெற்றிபெற வித்திட்ட‍ மாணவர் களுக்கு நன்றி!
நம்பாரம்பரிய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஜல்லிக்கட் டு (ஏறு தழுவுதல்) மீது
அந்நியர்களின் முயற்சியால் விதிக்க‍ப்பட்ட‍ தடையினை நிரந்தரமாக நீக்கி, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறவும்..  சென்னை மெரினாவில் தொடங்கிய மாணவர்களின் எழுச்சிப் போராட்ட‍ம் இளைஞர்களையும், பெண்களையும், உலகமக்க‍ளையும் கவரந்தது. இதன் காரணமாக மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்த‍ம்தரப்பட்டு, அதன் காரணமாக நமது தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மத்திய அரசின் துணையோடு  ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீக்க‍ப்பட்டுவிட்ட‍து, இனி தொடர்ந்து ஜல்லிக் கட்டு நடைபெறும் வழியில் அளுநரின் ஒப்புதலோடு நேற்று மாலை சட்ட‍ சபையில் அனைத்து கட்சிகளின் ஆத‌ரவோடு சட்ட‍ம் நிறைவேற்ற‍ப்பட்ட து. இந்த செய்தியை தமிழக முதல்வர் தெரிவித்தார். இதனையே  ஜல்லிக் கட்டு ஆதரவு அமைப்பினரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த‍னர். இதன் காரணமாக ஜல்லிக்கட்டு வரலாற்றில் இடம்பெற வேண்டிய இளைஞர்களின் மாபெரும் எழுச்சியினால் வெற்றி பெற்ற‍து.
இந்த இமாலய வெற்றிக்கு வித்திட்டும், கலந்துகொண்ட மாணவ, இளை ஞர்களின் பெரு எழுச்சியால் உலகமே நம் தமிழகத்தை அன்னாந்து பார்த் து வியந்து பாராட்டியுள்ள‍னர். அந்த அறப்போராட்ட‍தில் பங்கெடுத்த பெண்களின் கற்புக்கும் காவலனாக, மிகுந்த கண்ணியத்தோடும், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியோடும், ஒற்றுமையுடனும் மிகுந்த ஒழுக்க முடனும் அறவழியில் போராடிய  அனைத்து மாணவ சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும், அறப்போரா ளிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பண த்தை அள்ளித் தந்த‌ கொடைவள்ளல்களுக்கும், சேவைநோக்குடன் இருந் த மருத்துவர் களுக்கும்,  வழக்கறிஞர்களுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், சமூக வளைதளம், ஊடகம் மற்றும் பத்தி ரிகையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை அனைவரது பாதங்களையும் பணிந்து  என் தமிழினத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க‍ உடனடி நடவடிக்கை எடுத்த‍ தமிழக முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய மாநில அமைச்ச‍க அமைச்ச‍ர்களுக்கும், அதிகாரிகளுக்கும்  அரசுகளுக்கும் இந்நேரத்தில் இதய ப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...