Friday, January 27, 2017

நமது விவசாயிகள் பயனடைவார்கள்.



கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி, நம் வீட்டிலுள்ள மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.
கொள்ளைக்கார கம்பேனி காரர்களின் கொசு விரட்டிகளை விட, இதில் கூடுதல் பயன்கள் ஏராளம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 50 மில்லி சுத்தமான வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே.
ஒரு மாதத்திற்கு
மொத்த செலவே ரூ 11 மட்டு்மே,
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய்.
கடையில் வாங்கும் கொசு விரட்டியில் "அல்லோத்ரின்" எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள்.
யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள்.
ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள்.
நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு, அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில்.... இந்தியில் சினிமா எடுக்கிறார்கள்.
மக்களை மயக்கிட, விளம்பர படங்களை எடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க, கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் வேப்பெண்ணை கற்பூரம் மூலம், தயார் செய்து கொண்டால், குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து, நமது விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த முகம் தெரியாத அந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...