Thursday, January 19, 2017

மோடியுடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது...



பன்னீர்: அய்யா நான் பன்னீர் வந்துருக்கேன்...
மோடி: ம்ம்ம்... என்னய்யா? அதுக்குள்ள சின்னம்மாவுக்கு பாரத ரத்னா கேட்டு வந்துட்டீரா?
பன்னீர்: அதில்லீங்க அய்யா... ஒரு சின்ன பிரச்சனை... ஜல்லிக்கட்டு விசயத்துல பசங்க எல்லாம் ஒண்ணு கூடிட்டாய்ங்க... பெரிய தலைவலியா இருக்குய்யா....
மோடி: சரி அதுக்கு?
பன்னீர்: நிம்மதியா உட்கார விட மாட்டேங்குறானுங்க அய்யா.... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அந்த அவசர சட்டத்தை கொண்டு வந்தீங்கன்னா நல்லா இருக்கும்...
மோடி: (சற்று கடுப்புடன்) என்ன மேன் சொல்ற...என்னையும் சுப்ரீம் கோர்ட்டையும் மோத விடப் பாக்குறியா ?
பன்னீர்: இல்லீங்கையா.
எனக்கு புரியுதுங்க... ஆனா இந்த பசங்கள சமாளிக்கவே முடியல.
மோடி: சமாளிக்க முடியலைன்னா உடம்பு சரியில்லைன்னு அப்பல்லோல போயி அட்மிட் ஆகு மேன்...
பன்னீர்: (பயந்து போய்) அய்ய்யய்யோ... அப்பல்லோவா... அய்யா வேணாமுங்கய்யா... ஏதோ உங்க ஷேடோல ஒரு ஓரமா இருந்துக்குறேனுங்க...
மோடி: ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்...
பன்னீர்: சரிங்கய்யா..... தொந்தரவுக்கு மன்னிச்சு... நான் உத்தரவு வாங்கிக்கிறேன்ய்யா...
மோடி: சரி போயிட்டு வாரும்ய்யா... டோண்ட் ஒர்ரி... பீ ஹேப்பி...
பன்னீர்: சரிங்கய்யா... அப்படியே அந்த புயல் நிவாரண நிதி அறிவிச்சீங்கன்னா...
மோடி: நீர் இன்னும் போகலையா?
பன்னீர்: கெளம்பிட்டேன் அய்யா....
( மீடியா மைக்கை நீட்டுகிறது)
Image may contain: one or more people and text
பன்னீர்: மாண்புமிகு பாரத பிரதமர்மோ  டியுடனான ச
ந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது... மாண்புமிகு சின்ன அம்மாவின் சீரிய வழிகாட்டடலில் ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் தில்லிக்கு வந்து பிரதமரை சந்தித்தேன்...
சின்னம்மாவின் ஆணைக்கிணங்க பிரதமரிடம் வந்து எங்கள் கோரிக்கைகளை கொடுத்தோம்... ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை மோடி ஏற்று, நீங்களே சட்டம் போட்டுக்கங்க. தமிழர்களின் உணர்வுகளுக்கு மோடி என்றும் தன் கட்சியோ தன் அரசோ தடை இல்லை என்று உறுதிபடுத்தினார்....
இது தமிழினத்தின் வெற்றி, போராட்டக்காரர்களின் வெற்றி, சின்னம்மாவின் வெற்றி, அதிமுகவின் வெற்றி... மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்... சின்னம்மா வாழ்க... நன்றி! வணக்கம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...