Sunday, January 22, 2017

*சனீஸ்வரரின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?*

அது நல்லது அல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்கிறோம். இதுவே தவறு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனைச்சரன் என்ற வார்த்தைதான் மருவி சனீஸ்வரன் என்றாகி விட்டது. சனைச்சரன் என்றால் மெதுவாக நகர்பவன் என்று அர்த்தம்.
நவக்கிரகங்கள் என்பவர்கள் கடவுளர்கள் அல்ல. சொல்லப் போனால், கடவுள் இட்ட பணியை செவ்வனே செய்யும் வேலையாட்களே நவக்கிரகங்கள்! ஆலயத்தில் கூட அவர்களை பரிவார தேவதைகளாகத்தான் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சனி, ராகு, கேது மட்டுமின்றி, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. அது நல்லதல்ல. ஆலயத்தில்கூட முதலில் மூலவரை வணங்கிய பின்புதான் பரிவார தேவதைகளான நவக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...