ஐல்லிகட்டு போராட்டம் திட்டமிட்டப்படி வேறு பரிணாமத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறது நிறைய விசமிகளாள் !
முள்மேல் போட்ட துணிஇது இரண்டுபக்கதிலிருந்து யார் இழுத்தாலும் நஸ்டம் இருவருக்கும்தான் !
எந்த எதிர்பார்பும் இல்லாமல்தான் போராட்டத்தை ஆரம்பித்தனர் மாணவர்களும் இளைய தலைமுறையும் பொதுமக்களும் !
எந்த தனிநபர் துதிபாடலும் அரசியல் தலையீடும் சாதிமத வித்தியாசங்கள் இல்லாமலும் இந்த புரச்சியான போராட்டம் மிக அருகாமையில் வெற்றியை நெருங்கியது ! உலகமே திரும்பி பார்த்தது !
நாம் பாரத தாயின் புதல்வர்கள் அதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது! யாரோ சில விசமிகள் புகுந்து செய்யும் குழப்பங்கள் இந்த போராட்டத்தை கலங்கப்படுத்துகின்றன !
போராட்டத்தில் இருப்பவர்கள் சில விசயங்களில் தெளிவாக இருக்க வேண்டியது மிக அவசியம் ! என்ன காரணத்தை கொண்டும் நமது தேச இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக குரலோ கோசங்களோ போராட்ட களத்தில் பேசப்பட கூடாது!
தனிநபர் பற்றியோ தலைவர்களைப் பற்றி தவறாக பேசுவதோ கூடாது !
சமூகத்தின் அவலங்களை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது ! முதலில் எதுக்காக போராடினீர்களோ அந்த வெற்றியின் படிகட்டை முதலில் அடையுங்கள் ! அதை அடைந்து விட்டாலே ஆட்சியாளர்களுக்கு சரியான எச்சரிக்கை கொடுத்ததாக அமையும் இனியும் தவறு செய்தால் மக்கள் விட மாட்டார்கள் என்ற பயம் இருக்கும்!
ஐயா அரசியல் மற்றும் அதிகார வர்கங்களே கொஞ்சம் பொருமையாக நேரடியாக வல்லுனர்களைவிட்டு எடுத்து சொல்லுங்கள் !
நாளை சட்டமன்றத்தில் இதை சட்டமாக்க உண்டான முயற்ச்சியை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எடுத்து சொல்லி இதன் வெற்றியை மாணவர்களுக்கு காணிக்கையாக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் !
அவசரப்பட்டு மட்டரகமான முயற்ச்சியில் போராட்டத்தை கலைக்க முயற்ச்சி செய்து தங்களுக்கு தாங்களே அவபெயரை தேடி கொள்ளாதீர்கள் !
நாளை சட்டமன்றம் கூட போகிறது அதில் இந்த சட்டத்தை உறுதிப்படுத்தி அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லுங்கள் !
அமைதியான அறபோராட்டத்தில் ஈடுப்பட்டிற்க்கும் மாணவர்களே !மக்களே உங்களுக்குள் விசமிகள் புகுந்திருந்தால் அவர்களை களை எடுங்கள் !
கவலை வேண்டாம் உங்கள் கையில் மிக வலிமையான ஆயுதமான ஓட்டு என்ற பிரம்மாஸ்திரம் கைவசம் இருக்கிறது! !அதற்க்கு எப்படிப்பட்ட அரசியல்வாதியும் அடங்கிதான் போக வேண்டும் !
நாம் அகண்ட இந்த பாரத தேசத்தின் மைந்தர்கள் நமது பாரத மாதாவின் கடைசிபையன்தான் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள்!
பிரிவினைவாதத்தை மத சம்பந்தமான விசயத்தை பேச தூன்டும் எவரையும் உடனே வெளியேற்றி விடுங்கள் !
முதல் வெற்றியை முதலில் கொண்டாடுங்கள் ! அரசாங்கமும் அதிகாரிகள் சொல்வதையும் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்து சந்தேகங்களையும் சட்டசிக்கல்களையும் புரிந்து கொண்டு நல்ல முடிவெடுத்து போராட்டத்தின் முடிவுக்கு வாருங்கள் !
போராட்டம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் ! போராட்டங்களே வாழ்க்கையாகிவிடகூடாது !
வளர்க தமிழர் பண்பாடு! வாழ்க பாரத தேசம் ஜெய் ஹீந்த்!
No comments:
Post a Comment