Tuesday, January 10, 2017

இறைவன் தரும் வாய்ப்பு!

எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.
அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது.

அவனும் அதை கோட்டை விட்டான். துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.
விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான்
இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.
அருச்சுனனுக்கு போரின்போது இந்த போது குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.
கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.
செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்.
கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.
இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.
திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ
அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.
இரணியனை எப்போது அவன் கொன்றான்?
பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....
ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.
இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.
அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.
இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்.
பிறருக்கு உதவுதல்!...கடவுள் கருணையானவர். நல்லவர்களுக்குத் தீங்கு வருவதை அவர் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.
முதலில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து, பின்பு நீ உண்ணுவாயாக. அதுவே சிறந்த தருமம்.
ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும் சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம். அப்போது உலகமும் மகிழ்ச்சியாக இருக்கும்.உடலால் உலகத்துக் கடமைகளைச் செய்யுங்கள். மனதை கடவுளுக்கு அளித்துவிடுங்கள்.
உயர் பதவியில் இருப்போர் கடை நிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் எப்போதும் முன்னிலை வகிக்கலாம்.புலன்களுக்கு அடிமையாகக் கூடாது. புத்திசாலித்தனத்தால் அவற்றை ஆட்டுவிப்பவர்களாக மாற வேண்டும்.
பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் சிறிதும் அமைதியின்றித் தவிக்கிறான்.
மூச்சுக்காற்று உயிரையும், உடலையும் இணைப்பது போல வழிபாடே மனிதனைக் கடவுளோடு இணைக்கிறது.
நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்பினால் நாலா புறத்திலும் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

No comments:

Post a Comment