Wednesday, January 11, 2017

இதுவரை இப்படி ஒரு சிக்கல் வரவில்லை.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் ஒரு விசித்திர அனுபவத்தை உணர்வதாக சொல்கின்றார்கள்
அதாகபட்டது அவர்களிடம் பல கடைகள் மற்றும் ஹோட்டல்கள் அமெரிக்க டாலரில் பணம் செலுத்துமாறு கோருகின்றார்களாம்
இதுவரை இப்படி ஒரு சிக்கல் வரவில்லை
முதல் முறையாக இப்படி ஒரு நிலை வருகின்றது என்றால் அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும்
ஏன்?
உலகெல்லாம் அமெரிக்க கரன்சியின் பணம் புழங்க புழங்க அதற்கான தேவை அதிகரித்துகொண்டே இருக்கும், அவர்கள் கரன்சி வலுப்படும்
பெரும் பணம் புழங்கும் எல்லாவற்றிலும் டாலரை நுழைப்பார்கள். தங்கம், பெட்ரோல் என எல்லாவற்றிலும் அதுதான் விலை நிர்ணயம் செய்யும்
சதாம் உசேன் அதனால்தான் தன் எண்ணெய் விலையினை டாலரில் நிர்மானிக்கமாட்டேன் என செய்து அழிவினை தேடிகொண்டார்.
இதனை உணர்ந்தே யூரோ எனும் பொது நாணயத்தை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன.
அதாவது நல்ல திறமையான விழிப்பான நாடுகள் பெரும்பாலும் சொந்த கரன்சியினையே வலுபடுத்த நினைக்கும், பல நாடுகள் அப்படித்தான் தங்களை காத்துகொண்டிருக்கின்றன்
நல்ல அரசு என்றால் இந்தியாவில் அந்நிய கரன்சிகள் புழங்காது, அவை முறைப்படி மாற்றியபின்னேதான் இந்தியாவிற்குள் வரவேண்டும் என அனுமதிக்கும்
உலக நடைமுறை அதுதான். எங்கள் நாட்டில் எங்கள் பணம் தான் புழங்கவேண்டும் என்பதில் எல்லா நாடுகளும் மிக கவனமாக இருக்கும்
நாட்டின் பணமதிப்பு அப்படி இந்திய பணத்தினை அடுத்தவர்கள் பயன்படுத்துவதை பொறுத்துத்தான் நிலை நிற்கும்.
இங்கே மாற்றுவதற்கு கூட பணமில்லை
உலகில் வறிய ஆப்ரிக்க நாடுகள், இன்னும் மிக வறிய நிலையில் இருக்கும் நாடுகளில் எல்லாம் அமெரிக்க டாலர் ஊக்குவிக்கபடும்
ஏன் ஊக்குவிக்கபடும்?
அவர்கள் கரன்சி விழுந்து கிடக்கும் 1 அமெரிக்க டாலர் அவர்கள் பணத்திற்கு ஆயிரகணக்கில் வரும், கட்டுகட்டாக தூக்கி லாரியில் போட்டு சென்று 1 கிலோ அரிசி வாங்க‌ செல்லவேண்டும்.
அதனால் சொல்வார்கள், ஏன் இப்படி சாக்கு சாக்காக தூக்கி அலைய வேண்டும். பேசாமல் அமெரிக்க டாலரை பயன்படுத்தினால் என்ன?
இந்த டாலருக்கு எதிரான பிரச்சினைகள் எல்லாம் வராது, எல்லாம் சீராக செல்லும் என ஏமாற்றுவார்கள். பெரும் மோசடி அது. ஒரு நாட்டின் உரிமையினை பறிக்கும் செயல் அது.
இப்படி அந்நாடுகளின் உறிஞ்சும் சக்தியாக அமெரிக்கா மாறும்.
இன்று இந்தியாவிலும் ஊக்குவிக்க தொடங்கிவிட்டனர், அதாவது இந்தியா நாசமாக போகின்றது என பொருள்
இதனை எல்லாம் சொல்லாத அரசுதான், கேஷ்லேஸ் எக்கானாமி என சொல்லிகொண்டே இருக்கின்றது, அதிலும் டாலரில்தான் நிர்மானிப்பார்களோ என்னமோ?
பிரதமர் வெளிநாட்டு இந்தியர்களை புகழுகின்றார், அவர்களோ இந்தியாவில் டாலர் நடமாட்டம் கூடுகின்றது என்கின்றார்கள்
டாலர் நாட்டுக்குள் நடமாடுவது நாட்டின் வீழ்ச்சிக்கு பெரும் அறிகுறி.
இவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டுவந்திருப்பதும் அந்த விபரீதத்தின் அறிகுறி.
இதுபற்றி கேட்டால் பிரதமர் என்ன செய்வார்?
தீ மூட்டுங்கள் சீதை போல குதித்து என் தூய்மையினை நிரூபிக்கின்றேன் என கண்ணீர் விடுவார். ராமர் ஆட்சி அல்லவா?
இந்தியாவிற்கான பிரதமராக மோடி தெரியவில்லை
இது எந்த பிரதமரும் செய்ய துணியா செயல்,
கொஞ்சமும் தொலைநோக்கில்லா அந்நிய சக்திகள் பிடியில் சிக்கிய ஒருவராலேயே இப்படி எல்லாம் செய்ய முடியும்.
அமெரிக்க டாலரை விற்று இந்திய பணம் வாங்குங்கள் என அறிவிக்க வேண்டிய அரசு
அமெரிக்க டாலரை வாங்குங்கள் என ஊக்கபடுத்தினால் என்ன அர்த்தம்?
இந்தியாவினை விற்றுகொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...