Monday, January 9, 2017

என்னுள்ளே ராஜா. ....

உணர்வுகளை கையாளுவதில் நம் இசைஞானி இளையராஜா கை வந்த கலை. ..அவரது எண்ணற்ற பாடல்கள் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் எல்லா உணர்வுகளுக்கும்மான ஒரு வடிகால்.
அந்த வகையில் இன்று நான் தேர்வு செய்திருக்கும் பாடல் .அவள் அப்படி தான். ..
உறவுகள் தொடர்கதை. .
உணர்வுகள் சிறுகதை. .
ஓரு கதை ஒன்று முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடங்கலாம்..
இனி எல்லாம் சுகமே.....
அக்டோடபர் 30 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். .பாடலின் வரிகள்
கங்கை அமரன். . குரல் திரு. கே ஜேசுதாஸ்
அவர்கள். .
இளையராஜா என்னும் இசைபிரம்மா
இந்த பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் என்று சொல்வதை விட நம்
உள்ளத்துடன் உரையாடினார் என்று தான் நான் சொல்லுவேன். .இந்த பாடல் என் வாழ்க்கையில் ஒன்று கலந்து விட்ட நிலையில் இதை நான் எப்போது கேட்டாலும் என் கண்ணில் நீர் கோர்த்து கொள்ளும். ஏதோ இனம் புரியாத ஒரு சோகம் என்னை சூழ்ந்து கொள்ளும். ..மௌனமே மௌனமாகும்.
இது அல்லவா காற்றோடு கலந்த இசை. .
உணர்ச்சிகள் உச்சகட்டம் அழுகை.
ஆனால் இதை கேட்டு முடிக்கையில் நம்
நெஞ்சில் ஆறுதல் என்று சொல்வதை விட தலை சாய்த்து கொள்ள ஒரு இதமான தோள் கிடைத்து விட்ட ஒரு மன அமைதி. .
இது நான் என் வாழ்க்கையில் உணர்ந்த ஒன்று. இதனால் தானே நாம் அனைவரும் காலங்கள் கடந்தும் இந்த பாடலை இப்போதும் நாம் சுவாசித்து கொண்டு இருக்கிறோம்.
இந்த பாடலை எழுதிய கங்கை அமரனின் வார்த்தைகள் என்னை ஒருபுறம் மெய்சிலிர்க்க வைத்தாலும் இதை பாடிய
Kjy அவர்களின் குரலில் தான் என்ன ஒரு இனிமை. மெண்மை. இவர் கேரளாவில்உள்ள கொச்சி மாநிலத்தை
சேர்ந்தவர். இவரது வார்த்தை உச்சரிப்பில் தான் என்ன ஒரு நளினம் கவிதை நயம். .
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணிரை நான் மாற்றுவேன் என்று
 இவர் பாடும் போது நம் மனம் நம்மையும் அறியாமல் நெஞ்சம் கண்ணீரில் நிறைகின்றது அல்லவா. ?.
இந்த பாடலின் பின்னனியை நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் நான் அதைப்பற்றி இங்கு கூறபோவதில்லை.
1978 இந்த காலகட்டத்தில் இசைஞானி மிகவும் பிசியாக இருந்த தருணம்.
1976ல் தொடங்கிய அவரது இசை பயணத்தில் இந்த பாடல் அவருக்கு ஒரு தனித்துவமான ஒன்று. இந்த வருடத்தில் தான் அவரது இசை ஒரு தனிபிரமாணத்தை உண்டாக்கியது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவரது முந்தைய பாடங்களில் அதிகம் நாட்டுப்புற 
Image may contain: 1 person, beard and indoor
மெட்டுகளையும் குழைத்து கொடுத்து இருப்பார். இந்த பாடலின் இசைக்கோர்ப்பு
 மிகவும் நளினமான ஒன்று. பியானோ
எனப்படும் இசைகருவியை மையமாக வைத்து இசையமைக்க பட்ட பாடல்.
பாடலில் ஆரம்பத்தில் வரும். அதனை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையை என்னவென்று சொல்ல. ஒரு மூங்கிலில்
இருந்து இப்படி ஒரு மனதை வருடும் இசையா என்று வியக்க வைக்கிறது.
ஒவ்வொரு வரிகள் நடுவில் வரும் இந்த புல்லாங்குழல் இசை மட்டுமே போதுமானது
நம் இசைஞானி இளையராஜா அவர்களின் கைவண்ணம்.
உடைந்த உள்ளத்தை ஒன்று சேர்த்து வாரி அனைத்து தொள்களில் சாய்த்து கொண்ட ஓர் உணர்வு ஏற்படும்.
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது.
ஆம் ராஜாவின் இசையில் ஒன்று சேர்ந்ததால் தானே நமக்கு இன்பம் ..
உன் நெஞ்சிலே பாரம்
அதற்காகவே நானும். .
ஆம் நம் பாரங்களை ராஜாவின் இசையோடு
சுமக்கும் போது சுமையும் சுகமான ஒன்று.
நாளெல்லாம் ஆணந்தம். ..
இனி எல்லாம் சுகமே. ....ராஜாவின் இசையில். ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...