Monday, December 29, 2014

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவை யில்லை.
முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.
Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும்,
இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.
காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.
காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பது மில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சா வூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பி க்கலாம்.
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore – 641018
Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண் ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai – 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண் ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

புத்தாண்டு வாழ்த்துக்களை – நீ

எத்னை முறைவேண்டுமானாலும் சொல்லிக்கொள்

எத்னை மொழிகளில் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் – ஆனால் 

புத்தாண்டு 2015-ல் உனது பெயர் சரித்திரத்தில் 

முத்திரை பதிக்க‍ நீ

எத்னை முயற்சி செய்வாய்?

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து 

காட்டுவதே! முக்கியம்............

இந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓர் அலசல்

இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவரு க்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓர் அலசல்
 இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவரு க்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System)  எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனை த்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில்
வருமானம் கிடைக்கச் செய் வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதார ப் பாதுகாப்பின்றி இருப்ப தை தவிர்ப்பதுடன், மக்களு க்கு சேமிக்கும் பழக்கத்தை யும் ஏற்படுத்தும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர் பார்ப்பு!

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கி கள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறு வனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக ‘பிரான்’ (PRAN- Permanent Retirement Account Number) எண் தரப் படும். இது வாழ்நாளுக்கான எண்.
18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்கள் இத் தி ட்டத்தில்சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழிய ர்கள், தனியார் நிறுவன ஊழியர் கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன்பெறலாம். வெளிநாடு வாழ் இந்தி யர்கள் (N.R.I.)மற்றும் பப்ளிக் பிராவிட ண்ட் ஃபண்ட் (P.P.F) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். நீங்கள் 100 ரூபாய்செலுத்தினா ல், உங்கள் கணக்கில் ஆண்டு க்கு 100ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்க ளுக்குமட்டும்). அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய்வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000ரூபாய் கிடைக்கும். அதற்குமேல் செலுத்துவோரு க்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகையிலி ருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8%  முதல் 12% கூட்டுவட்டியுடன் .
மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேரவேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தி ல் முகவர் களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் வயதான வர்களிலே முழங்கால் மூட்டு போன்ற பெரிய மூட்டுகளிலே ஏற்படுகின்ற வலி பொதுவாக ஒஸ் டியோ ஆர்த்திரைட்டிசினா லேயே ஏற்படுகிறது (Osteo arthritis).
(சிறிய மூட்டுக்களிலும் இது ஏற்ப டலாம்) இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை யே தாக்கும். இரண்டுக்கு மேற் பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட் டால் அது வேறு வகையான நோ யாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.
இந்த நோய் மூட்டுகளில் எழும்புகள் தேய்வதாலும் ,எழும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாலும்ஏற்படு கிறது. இதன் அறிகுறிகள்… மூட்டு வலி, மூட்டு இறுக் கமான நிலை, சிலவேளைகளில் சிறிதளவான வீக்கம். சில வேளை களில் மூட்டினுள்ளே சிறிதளவான நீர் தேங்கலாம்.
சில நபர்களில் கொர கொர என்ற சதம் ஏற்படும்.(மூட்டை அசை க்கும் போது) இதற்கு மருந்தாக பரசிட்டமோல் போன்ற வலி நிவாரணிகளை பாவிக்கலாம். அத்தோடு வீரியம் கூடியவலி நிவாரணிகளை நோய் ஏற்பட்ட மூட்டின் மேல் பூச்சாக பயன் படுத்தலாம்.
பரசிட்டமோல் தவிர்ந்த மற்ற நோய் நிவாரணிகளை தொடர் ச்சியா வாய் வழியாக உள்ளெடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் முக்கியமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
வலி நிவாரணிகள் தவிர மூட்டிற்கு செலுத்தப்படும் விசையை குறைப்பதற்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சொக்ஸ் போன்ற வற்றையும் பாவிக்கலாம்.
நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் கைத்தடி பாவிக்கலாம். கைத்தடி பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு எதிர்ப்பகத்திலேயே பாவிக்கப் பட வேண்டும். உடற்பருமனானவர்கள் உடல் நிறையைக் குறைப் பது கட்டாயம்.
இல்லாவிடில் இந்த நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும். மூட்டு வலி ஏற்பட்டவர்கள் எப்போது உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்? இரண்டுக்கு மேற்பட்ட மூட்டு களில் வலிஎற்படுதல் மூட்டு வலியோடு காய்ச்சல் ஏற்படுதல் மூட்டுகள் அதிகமாக வீங்குவதுடன் சூடாக இருத்தல் மூட்டு வலியோடு பசிக்குறைவு/உடல் மெலிதல் போன்றவை

வாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வழிகள்

வாட்ஸ் அப்-ஐ உங்க‌  கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வழிகள்
ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே
சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும்கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்க லாம். கண னியில் வாட்ஸ்-அப் எப்படி பதி விறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பா ர்க்கலாம்
1. கணனியில் வாட்ஸ்-அப் பய ன்படுத்த முதலில் (blue stacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய் டு எமுலேட்டரைமுதலில் பதிவிறக்கம்செய்து வைத் து கொள்ள வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த ப்ளூ ஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால்செய்ய வேண்டு ம்.
3.ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலே ஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூ ஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.
4. ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்-அப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும்.
5.வாட்ஸ்அப் அப்ளிகேஷன் பதிவிற க்கம்ஆனதும் அதை ரன் செய்யுங்கள்.
6. அடுத்து உங்க மொபைல் நம்பர் மற் றும் லொகேஷ னை வாட்ஸ்-அப்பில் என்டர் செய்யுங் கள்.
7. உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ் -அப் பயன்படுத்த ரெடியாகி விடும்.

டிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா ?

சமீப காலங்களில் 100 கணக்கான சேனல்கள் தங்கள் பொழப்பை ஓட்ட even Discovery Channel
போன்றவைகள் கூட தங்கள் பிழைப்புக்காக பல டெலிமார்க்கெட்டிங் விளம்பரங்களை உபயோகப்படுத்துகிறது. இவற்றில் 95 சதவீதம் மிகவும் போலியான மார்க்கெட்டில் மலிவான கிடைக்கும் பொருளையே வேறுபெயரில பொய்யான உறுதிமொழியுடன் சைடு எபக்ட்களை உருவாக்கும், நாட்டு மருந்துகள் என்ற பெயரில் கெமிக்கல்களையும், ஒன்றுக்கும் உதவாத ஆயில்களையும் விற்பனை செய்வதாகத் தெரிகிறது.
q1
1. எனது, மகளின் நண்பி 50 கிலோ இருந்தாராம், எடையை குறைக்கவேண்டி டிவி விளம்பரத்தில் வந்த புரேட்டின் பவுடரை வாங்கி சாப்பிட்டதில் சடார்ன்னு 20கிலோ எடையாக ஆகிவிட்டாராம் ஆனால்,
உடலில் உள்ள எல்லா பாகங்களும் சுருங்கி கிட்டத்த்ட்ட 1 வருடம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி
இன்னமும் நார்மலுக்கு வரமுடியவில்லையாம்.. எச்சரிக்கை.
2. வழக்கமான முடிவெட்டிவிடும் நண்பரின் கடைக்கு சென்றிருந்தேன், நண்பருக்கே வழுக்கை
ஆனால், விலை உயார்ந்த எருமாமாட்டின் போன்ற ஆயில்களை வாங்கித்தடவ வசதியில்லை. வாய்ப்பாக ஒரு கஸ்டமர் மேற்கண்ட ஆயிலை வாங்கி தடவி விடசசொல்ல இவரும் கொஞ்சம் தனக்காக பயன்படுத்தி பார்த்திருக்கிறார் 3 மாதமாக கிட்டத்தட்ட 10000 ரூபாய் செலவில்… 3 மாதங்களில் கொஞ்சம் நஞ்சம் இருந்த முடிகளும் விழுந்திருக்கிறது. ஆனால் புதிதாக வளரவில்லை..
3. போன்மூலம் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது, 2500 மட்டும் டேக்ஸ் கட்டி காலக்ஸி ஸ்மார்ட் போன் 25000 மதிப்புடையதை வாங்கிக்கொள்ளுங்கள் என பக்கத்து வீட்டு அம்மணியிடம் சொல்ல, அடித்து பிடித்து மாதாந்தாந்திர சேமிப்பை நிறுத்தி பணத்தை எடுத்துக்காத்திருந்தால் வந்ததோ காலக்ஸி டெல்லி செட் ஸ்மார்ட் போன். ஒரு சிலருக்கு தனலட்சுமி எந்திரம் என மாற்றி வருவதும் உண்டு.. ஏமாறாதீர்கள்
q2
4. டெலிமார்க்கெட்டிங்கில் உள்ள பல பொருள்கள் பிளாட்பார்ம்களிலும், வீட்டு உபயோகப் பொருட்காட்சிகளிலும் மிகச் சல்லிசாக கிடைப்பதைக் காணமுடிகிறது…. ஏமாறாதீர்கள்…
5. போதைபழக்கத்தை நீக்குகிறேன், சர்க்கரை வியாதியைப் போக்குகிறேன் என இப்போ ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. முழுக்க ஒரியா, மராட்டி போன்ற இடங்களில் இருந்து துணை நடிகர்கள் கூட்டத்தை களமிறக்கி பிராடக்ட்டைப்பற்றி ஆகோஓகோன்னு ஒரு இத்துபோன காம்பியர், குண்டு நடிகையை வைத்து விளம்பரம் வருகிறது… அதுவும் டூபாக்கூர் தான்னு சொல்லிக்கிறாங்க… உண்மையான மருந்துகள் நாட்டில் கிடைக்கும் ஆனால் இவர்களிடத்தில் இல்லை… பணத்தை வீணாக்காத்திருக்க விழிப்புடன் இருக்கவும்.

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிரவைக்கும் உண்மைகள்

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிர வைக்கும் உண்மைகள்
‘‘7, 8 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக் காதவர்களே இல்லை. இன் றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல்
அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டது தான். இந்தக் கசப்பான அனுப வத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால், இப்படி செய்வது கூட வே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப் படி செய்யவில்லை எனில் எதிர் காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவ சாலி கள்.
கிரெடிட் கார்டினை முறையாக கே ன்சல் செய்யாமல் விட்டால் ஏற்படு ம் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மைய த்தின் முதன்மை ஆலோசகர் எஸ். கோபால கிருஷ்ண னிடம் பேசினோம். அவ ர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே…
“நான் கிரெடிட் கார்டு ப யன்படுத்துவதை நிறு த்தி பல மாதங்கள் ஆ கிறது. ஆனால், வங்கி யில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களதுஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள். இவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக்  கா ரணம், கிரெடிட் கார்டுகளை முறை யாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.
 கேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்!
ஒருநாள் கணேசன் என்ப வர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வே லை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வ ங்கியின் கிரெடிட் கார்டு ஒன் றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட் டுவிட்டுப்போய்விட்டார். அவ ர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பய ன் படுத்த  ஆரம்பித்திருக்கி றார்.  கணேசன்  அமெரிக்கா வில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.
ஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ ப யன்படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.

கிரெடிட் கார்டை  முறையாக கேன்சல் செய்யாமல் விட்ட தால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப்  புரியவைத் தோம். அந்தக் கடனை சுமூக மாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்ய வும் நாங்கள் அவருக்கு உதவினோம்.
நட்பால் வந்த நஷ்டம்!
ஸ்ரீதரன் என்பவர் தான் பய ன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாம ல்,  தனது நண்பரிடம் தந்தி ருக்கிறார். அதை அவர் தன து வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஒருசமயம்  வ ண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண் டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கி றார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகை க்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ் செய்தியாக வந்தது. அதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண் பருடன் வங்கிக்குச் சென்று நடந் ததை விசாரித்துத் தெரிந்து கொ ண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கே ன்சல் செய்துவிட்டு, வீட்டு க்குத் திரும்பியிருக்கிறார்.
எப்படி கேன்சல் செய்வது?
கிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட் டுவைக்காமல், கேன்சல் செ ய்துவிடுவதே நல்லது. இத ற்கு, கிரெடிட் கார்டு வழங் கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனு டன் தான் அதுவரை பயன்படு த்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத் து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை  வாங்கிக்கொள்ள வேண்டும்.
அல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ  போன்மூலமா கவோ தெரிவித்து விட்டு, துண் டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர்மூலம் வங்கிக்கு அணு ப்பலாம். எனினும், இப்ப டி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கிரெடி ட் கார்டினை கேன்சல் செய் வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.
கிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது!

Thursday, December 25, 2014

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.
பெட்ரோல் vs டீசல் எது சிறந்தது
பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்க லாம்…வாருங்கள்…  

கார் விலை

பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக் கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரை பயன் படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம். (சென்னை விலை)
பீட்  டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..

எரிபொருள் விலை

எரிபொருள் விலை இதுபற்றி சொல்ல வே தேவையில்லை இன்னை க்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகி விட்டது. பெட்ரோல் விலை எப்பொழு துமே அதிகமாகத் தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ.20/- வித்தியாசம் இருக் கத்தான் செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmplஆகும். நாம் 14 கீமிமைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்கு வதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணி க்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய  ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மை லேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய  ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
 பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000 – 60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட்  அல்லது  எல்பிஜி கிட் இனைத்து க்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள் கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1.50 ஆகும்.

சிஎன்ஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்ற ன.
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன் படுத்த இயலாது.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பரா மரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின் றனர்.

கார் பயன்பாடு

பயன்பாட்டின் சில காரணிகளை வை த்தும் எரிபொருள் வகையி னை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன் படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால் என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம்பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால்  டீசல் காரை தேர்ந்தேடுக்கலா ம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்க லாம். நகரங்களில் அதிகம் பயன் படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி) தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.
டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி) தேவைப் படும். டீசல் செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமா மாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார் பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.

பெர்பாமன்ஸ்

பெட்ரோல் கார் ஆனது டீசல் காரைவிட வேகம் கூடுதலாக இருக் கும்.  ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும். பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.

மறு விற்பனை விலை

பயன்படுத்தப்பட்ட காராக விற்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவா கத்தான இருக்கும்.
5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல் காரில் குறைவாக இருக் கும்.
 மேலும் சில . . .
 பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதி யில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.
இவற்றையும் கடந்த மாற்று எரி பொருளுக்கு முக்கியத்துவம் கொடு த்தால் நன்றாக இருக்கும்.
*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ், விலை விபர ங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப் பட்டது.

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த உணவு களைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?
சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட
சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுக ளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார் டய ட்டீஷியன் புவனேஸ்வரி
இந்த உணவுகளைச் சாப்பிட்டதா ல்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்க லாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன் றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிற து.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க் கடலை, பால், அசைவஉணவு வகைகள், எண்ணெய் எல்லா ம் சீக்கிரமே கெட்டுப்போகும்.எண்ணெயில்பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்துவரும். மழை, பனி க் காலத்தில் உணவுகள் கெட்டுப்போகக் காரணமா க இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்ச னுக்குள் இருக்கும் பொருட் களுக்குள்வந்து உட்கார்ந்துகொள்ளும் இப்பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப்போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல் லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என் கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற் ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும். கிச்சன்பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள்இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன் படுத்து வார்கள். வெயிலில் காயவைப்பதால் பூஞ்சை கள் மறைந்து விடாது.

அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினா லும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும் போது கவன மாக இருங்கள். எண்ணெயில் இரு ந்து கெட்டுப்போன வாசனை வந் தால் அதைச்சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங் களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களைஃப்ரெஷ்ஷாகவாங்கி பயன்படுத்த வேண் டும்.
ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக் காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிட ப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள் ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீ ங்களே தயாரித்தனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப் பிடுவதற்கு முன் பல முறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு த யிர் சாப்பிடக் கூடா து, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதை களைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...