Monday, December 29, 2014

டிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா ?

சமீப காலங்களில் 100 கணக்கான சேனல்கள் தங்கள் பொழப்பை ஓட்ட even Discovery Channel
போன்றவைகள் கூட தங்கள் பிழைப்புக்காக பல டெலிமார்க்கெட்டிங் விளம்பரங்களை உபயோகப்படுத்துகிறது. இவற்றில் 95 சதவீதம் மிகவும் போலியான மார்க்கெட்டில் மலிவான கிடைக்கும் பொருளையே வேறுபெயரில பொய்யான உறுதிமொழியுடன் சைடு எபக்ட்களை உருவாக்கும், நாட்டு மருந்துகள் என்ற பெயரில் கெமிக்கல்களையும், ஒன்றுக்கும் உதவாத ஆயில்களையும் விற்பனை செய்வதாகத் தெரிகிறது.
q1
1. எனது, மகளின் நண்பி 50 கிலோ இருந்தாராம், எடையை குறைக்கவேண்டி டிவி விளம்பரத்தில் வந்த புரேட்டின் பவுடரை வாங்கி சாப்பிட்டதில் சடார்ன்னு 20கிலோ எடையாக ஆகிவிட்டாராம் ஆனால்,
உடலில் உள்ள எல்லா பாகங்களும் சுருங்கி கிட்டத்த்ட்ட 1 வருடம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி
இன்னமும் நார்மலுக்கு வரமுடியவில்லையாம்.. எச்சரிக்கை.
2. வழக்கமான முடிவெட்டிவிடும் நண்பரின் கடைக்கு சென்றிருந்தேன், நண்பருக்கே வழுக்கை
ஆனால், விலை உயார்ந்த எருமாமாட்டின் போன்ற ஆயில்களை வாங்கித்தடவ வசதியில்லை. வாய்ப்பாக ஒரு கஸ்டமர் மேற்கண்ட ஆயிலை வாங்கி தடவி விடசசொல்ல இவரும் கொஞ்சம் தனக்காக பயன்படுத்தி பார்த்திருக்கிறார் 3 மாதமாக கிட்டத்தட்ட 10000 ரூபாய் செலவில்… 3 மாதங்களில் கொஞ்சம் நஞ்சம் இருந்த முடிகளும் விழுந்திருக்கிறது. ஆனால் புதிதாக வளரவில்லை..
3. போன்மூலம் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது, 2500 மட்டும் டேக்ஸ் கட்டி காலக்ஸி ஸ்மார்ட் போன் 25000 மதிப்புடையதை வாங்கிக்கொள்ளுங்கள் என பக்கத்து வீட்டு அம்மணியிடம் சொல்ல, அடித்து பிடித்து மாதாந்தாந்திர சேமிப்பை நிறுத்தி பணத்தை எடுத்துக்காத்திருந்தால் வந்ததோ காலக்ஸி டெல்லி செட் ஸ்மார்ட் போன். ஒரு சிலருக்கு தனலட்சுமி எந்திரம் என மாற்றி வருவதும் உண்டு.. ஏமாறாதீர்கள்
q2
4. டெலிமார்க்கெட்டிங்கில் உள்ள பல பொருள்கள் பிளாட்பார்ம்களிலும், வீட்டு உபயோகப் பொருட்காட்சிகளிலும் மிகச் சல்லிசாக கிடைப்பதைக் காணமுடிகிறது…. ஏமாறாதீர்கள்…
5. போதைபழக்கத்தை நீக்குகிறேன், சர்க்கரை வியாதியைப் போக்குகிறேன் என இப்போ ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. முழுக்க ஒரியா, மராட்டி போன்ற இடங்களில் இருந்து துணை நடிகர்கள் கூட்டத்தை களமிறக்கி பிராடக்ட்டைப்பற்றி ஆகோஓகோன்னு ஒரு இத்துபோன காம்பியர், குண்டு நடிகையை வைத்து விளம்பரம் வருகிறது… அதுவும் டூபாக்கூர் தான்னு சொல்லிக்கிறாங்க… உண்மையான மருந்துகள் நாட்டில் கிடைக்கும் ஆனால் இவர்களிடத்தில் இல்லை… பணத்தை வீணாக்காத்திருக்க விழிப்புடன் இருக்கவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...