மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் வயதான வர்களிலே முழங்கால் மூட்டு போன்ற பெரிய மூட்டுகளிலே ஏற்படுகின்ற வலி பொதுவாக ஒஸ் டியோ ஆர்த்திரைட்டிசினா லேயே ஏற்படுகிறது (Osteo arthritis).
(சிறிய மூட்டுக்களிலும் இது ஏற்ப டலாம்) இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை யே தாக்கும். இரண்டுக்கு மேற் பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட் டால் அது வேறு வகையான நோ யாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.
இந்த நோய் மூட்டுகளில் எழும்புகள் தேய்வதாலும் ,எழும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாலும்ஏற்படு கிறது. இதன் அறிகுறிகள்… மூட்டு வலி, மூட்டு இறுக் கமான நிலை, சிலவேளைகளில் சிறிதளவான வீக்கம். சில வேளை களில் மூட்டினுள்ளே சிறிதளவான நீர் தேங்கலாம்.
சில நபர்களில் கொர கொர என்ற சதம் ஏற்படும்.(மூட்டை அசை க்கும் போது) இதற்கு மருந்தாக பரசிட்டமோல் போன்ற வலி நிவாரணிகளை பாவிக்கலாம். அத்தோடு வீரியம் கூடியவலி நிவாரணிகளை நோய் ஏற்பட்ட மூட்டின் மேல் பூச்சாக பயன் படுத்தலாம்.
பரசிட்டமோல் தவிர்ந்த மற்ற நோய் நிவாரணிகளை தொடர் ச்சியா வாய் வழியாக உள்ளெடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் முக்கியமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
வலி நிவாரணிகள் தவிர மூட்டிற்கு செலுத்தப்படும் விசையை குறைப்பதற்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சொக்ஸ் போன்ற வற்றையும் பாவிக்கலாம்.
நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் கைத்தடி பாவிக்கலாம். கைத்தடி பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு எதிர்ப்பகத்திலேயே பாவிக்கப் பட வேண்டும். உடற்பருமனானவர்கள் உடல் நிறையைக் குறைப் பது கட்டாயம்.
இல்லாவிடில் இந்த நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும். மூட்டு வலி ஏற்பட்டவர்கள் எப்போது உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்? இரண்டுக்கு மேற்பட்ட மூட்டு களில் வலிஎற்படுதல் மூட்டு வலியோடு காய்ச்சல் ஏற்படுதல் மூட்டுகள் அதிகமாக வீங்குவதுடன் சூடாக இருத்தல் மூட்டு வலியோடு பசிக்குறைவு/உடல் மெலிதல் போன்றவை
No comments:
Post a Comment