Monday, December 22, 2014

சிரிப்போ..சிரிப்பு… குட்டீஸ் அனுபவம்..

நெட்டில் மேய்ந்துகொண்டிருந்தபொழுது, இதற்கப்புறம் வரும் ஒரு சின்னக்குழந்தை மற்றும் அவரின் பாட்டிக்கும் நடைபெறும் உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கு, படித்தேன் சிரித்தேன்.. நீங்கள்…
“அம்மம்மா.. இன்னிக்கு என்ன புவா?”
“கோதுமை தோசை.. உனக்கு புடிக்கும் தான?”
“ஏன் அம்மம்மா எப்பப் பார்த்தாலும் கோதுமை தோசையே ஊட்டறீங்க? நிறைய சுட்டு அடுக்கி வெச்சிட்டிங்களா? தீரவே மாட்டிங்குதா?”
“ஙே!!!.. சரி இன்னிக்கு ஒரு நாள் சாப்டுடுவியாம்.. நாளைக்கு நூடுல்ஸ் செஞ்சிக்கலாம்..”
“ஹ்ம்ம்ம்.. (பொய் அழுகை)
”ஆ வாங்கு மா…. பாரு பால்கனி பூச்சாண்டி வந்து நிக்கறான்… பாப்பா சாப்டாளா நான் உள்ள வரட்டா ந்னு கேக்கறான். நீ வேற ஏண்டா சும்மா எட்டி எட்டி பாக்கற? எங்க பாப்பா சமத்து.. சீக்கிரம் சாப்டுடுவா.. நீ சாப்பிடுடி தங்கம்..”
t1
“அம்மம்மா.. அவன் ஏன் எப்பப் பார்த்தாலும் இங்கயே வந்து நின்னுக்கறான்? வேற எங்கயும் போகவே மாட்டிங்கறான்? குழந்தைங்கள்லாம் தீர்ந்து போய்ட்டாங்களா?”
“என்ன சொல்ற? தீர்ந்து போறதுன்னா என்ன?”
“அதான்.. பூச்சாண்டி எல்லா குழந்தைகளையும் சாப்டுட்டானா?”
“அவன் குழந்தைகளை சாப்பிட மாட்டான்.. நல்லா வலிக்கற மாதிரி கடிச்சி மட்டும் தான் வைப்பான். நீ சாப்டு முடிச்சதும் பக்கத்து வீட்டுக்கு போய்டுவான்.. நீ சாப்பிடறதுக்கு தான் வெய்ட் பண்றான்.. சீக்கிரம் சாப்பிடு..”
“அம்மம்மா.. பால்கனி பூச்சாண்டி பாயா? கேர்ளா?”
“ஙே? பாய் தான்”
“எப்டி தெரியும்?”
“பேண்ட் ஷர்ட்லாம் போட்டுட்டு வர்றானே? நீ பார்க்கலயா?”
“ஹைய்யோ…நானும் தான பேண்ட் ஷர்ட்லாம் போடறேன்? நான் என்ன பாயா?”
“சரிம்மா.. நீ வாய்ல இருக்கறத முழுங்கு மொதல்ல..”
“அம்மம்மா, பால்கனி பூச்சாண்டி, நானா பூச்சாண்டியா?”
“ஆமா..”
“அம்மா பூச்சாண்டி, குட்டி பூச்சாண்டில்லாம் வீட்ல இருக்காங்களா?”
“ம்ம்”
T2
“இங்கயே நின்னுட்டிருந்தா நானா பூச்சாண்டிக்கு ஆபீஸ்க்கு லேட் ஆவாதா?”
“அவன் ஆபீஸ்க்கெல்லாம் போக மாட்டான்.. குழந்தைங்க ஒழுங்கா சாப்பிடறாங்களா, தூங்கறாங்களா.. ஸ்கூல் போறாங்களான்னு பாக்கறது தான் அவன் வேலை.. டேய்.. உக்கார்றா.. இவன் ஒருத்தன் சும்மா சும்மா எட்டி எட்டி பார்த்துகிட்டு.. “
“அம்மம்மா.. பூச்சாண்டி வீட்ல குட்டி பூச்சாண்டி சாப்பிடாம அடம்பிடிசா என்ன செய்வாங்க அவங்கம்மா?”
”!!!!???””
அரை தோசை சாப்பிடுவதற்குள் இத்தனை கேள்விகள். நல்லவேளையாய் ஸ்கூல் பஸ் வரும் நேரமாகி விட்டதால் அம்மா தப்பித்தார்கள். ஆனால், திரும்பி வரும்போது மறக்காமல் இதே கேள்வியோடு வருவாளே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...