Thursday, December 11, 2014

தமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அதிகரிப்பு


இந்தியாவின் இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கக் கடத்தலை லாபகரமான தொழிலாக்கியுள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவிற்குள் தங்கம் கடத்திவரப்படுவதும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவு தங்கம், தமிழகம் வழியாக கடத்தப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரே நாளில் பனிரண்டரைக் கிலோ கடத்தல் தங்கம் பிடிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தின் கழிப்பறை ஒன்றில் இரண்டு கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி மதுரையில் 9 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பிடித்தனர்.
இந்தியாவிற்குள் வரும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்ததால் ஏற்பட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், கடந்த 2012 ஆண்டிலிருந்து தங்கம் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு அதிகரிக்க ஆரம்பித்து. 2013ஆம் ஆண்டு ஆகஸ்டில் இது 10 சதவீதத்தை எட்டியது.
அதற்குப் பிறகுதான், இந்தியாவிற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்தது.
2012-13ஆம் ஆண்டில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் 150 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 60 கிலோ தங்கம் பிடிபட்டது.

கடல்வழியாக கடத்தல் அதிகரிப்பு

இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 200 கிலோ தங்கத்தைப் பிடித்திருப்பதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடல் வழியாக கடத்தப்படும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம்.எம். பார்த்திபன், விமான நிலையங்களில் சுங்கத் துறை கெடுபிடியால் கடத்தல்காரர்கள் கடல் மார்க்கத்தை நாடுவதாகத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி, இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட பதினெட்டரைக் கிலோ தங்கம் வேதாரண்யத்தில் வருவாய்ப் புலனாய்வுத் துறையினரால் பிடிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு கடல் வழியாகக் கடத்தப்படும் தங்கம் பெரும்பாலும் இலங்கையிலிருந்தே கடத்தப்படுகிறது. இரு நாட்டுக் கடற்கரைகளும் அருகருகில் இருப்பது கடத்தலுக்கு ஏதுவாக இருக்கிறது என்கிரார் பார்த்திபன்.

இந்தியாவின் இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கக் கடத்தலை லாபகரமான தொழிலாக்கியுள்ளது.
தற்போது இலங்கை அரசும் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் மாதகல்லுக்கு அருகில் ஒரு ஃபைபர் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 45 கிலோ தங்கத்தை இலங்கைக் கடற்படை கைப்பற்றியது.
தற்போது இலங்கை அரசும் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் மாதகல்லுக்கு அருகில் ஒரு ஃபைபர் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 45 கிலோ தங்கத்தை இலங்கைக் கடற்படை கைப்பற்றியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...