Monday, December 15, 2014

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்!

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்
ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில்
சிறந்த பள்ளி ஒன் றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடு முறைக்கு தன் பாட்டி ஊரான காரை க்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனி மையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும்ம றைந்தது. ஏன்? அங்கு சென் னையிலி ல்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்த து. அங்குள்ள அனைவரும் அவதிப்ப டுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில் லை. தான்தங்கியிருந்த அ றைக்கு சுயகண்டுபிடிப்பி ல் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்ப டி? தன் பாட்டி வீட்டிலிருந் த பசுமாட்டிலிருந்து 2கிரா ம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அத ற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினை க்கூட்டி மின் விசிறி ஓடச்செய் தான். அவனுடைய கண்டுபிடிப் பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரி சக்தி, பொறியியல் ஒலிம்பிக்கி ல் அவன் அமெரிக்கா டெக்ஸா சில் நடந்த பொ ருட்காட் சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவ னுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத் தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகா ரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார் ந்து விசிறியால் அல்லது கா லண்டர் அட்டையால் வீசிக் கொண்டு இருப்போம். ஆனா ல் அந்தச் சிறுவன் அந்தத் தே வைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள் ளான். அவன் கண்டுபிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில்வருங்காலத்தில் மின் உற் பத்தி மாற்றுத் தொழில் ஏற்படுத்து வதிற்கும் வழி யாகும் அல்லவா? ஆகவே நமது சிறிய சேமி ப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமா ன வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக் கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் மு னைவோருக்கு மானியம் வழங்குகிற து.
மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
1) மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2)தோல் சம்பந்தமான பொ ருட்கள் தயாரிப்பு
3) வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
4) மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5) சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6) ஏற்றுமதி ஆபரணங்கள்
7) மாசுகட்டுப்பாடு உபகரணங் கள்
8) விளையாட்டுப் பொருட்கள்
9) சிக்கன கட்டுமானப் பொருட் கள்
10) ஆயத்த ஆடைகள் தயாரிப் பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படு கிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறை ந்த மின் அழுத்த மின்சாரம் வழங்க ப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக் கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆ ண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியி ல் ஈடுபடுத்தவும் நிறுவனங்க ளுக்கு கூடுதலாக ஐந்து சதவீ தம் அதிகபட்சமாக ரூபாய் ஐந் து லட்சம் வரை வேலை வாய் ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைக ள் பெற பின்தங்கிய வட்டங் கள் என அறிவிக்கப்பட்டுள்ள ன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொ ழில் மையங்கள் நிறுவப்பட் டு 1803 தொழில் நிறுவனங்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள்மூலம் அறிந்து தொழில் தொ டங்கலாம்.
தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவிசெய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? வெறும் கையி னை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.உங்களிடம் தகுதி, திறமை, உழைப்பு மற் றும் விடா முயற்சி இருந்தா ல் கண்டிப்பாக உங்களுக்கு வங்கிகளில் இருந்து கடனு தவி கிட்டும்
சுயதொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய் யும் மனப்பான்மையுடன் உரு வாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடி ப்படையில் வறுமைக்கோட்டிற் குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உத விக்குழு தொடங்கலாம். அப்ப டி தொடங்கப்பட்ட குழு அங்கீக ரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத் தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வி யறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம்தெரிந்தவர் இயக்குனரா கவும், மற்றும் இரண்டு பிரதிநிதிக ள் கொண்ட செயற்குழுவினை ஏற்ப டுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன் று மாதங்க ளில் சங்க சேமிப்பில் உறுப்பினர்க ளுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச்செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச்செலுத்து ம் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங் கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கட ன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூ பாய் 1,75,00 மானியமாகப் பெ றலாம். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல் லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர் களுக்கு ஏற்படுத்தலாமே!
ஒருங்கிணைப்பு:
முன்பெல்லாம் தொழில் தொட ங்க ஒவ்வொரு அலுவலமா க அலைந்து அனுமதி வாங்க வே ண்டியதிருந்தது. அதனை ஒரு ங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச்செய்து எளிதாக்கியுள் ளார்கள். கீழ்கண்ட மையத்தி ல் மனு செய்தாலே உங்களுக் குத் தேவையான அனுமதி கி டைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம் பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600 008
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத் தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கை யாளர்களை நம்முடைய அணு குமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதா ரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையி லுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங் குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மக ன் கவனித்து வந்தார்கள். வாடி க்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந் தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையி ட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவ ர் என்று கேள்விப்பட்டேன். வழக்கம்போல் வாங்கும் மளி கை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரி த்தபோது அது பூசனம் அடைந் திருந்தது. உடனே அதனை எடு த்துச் சென்று அந்த இளைஞரி டம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தர மறுத்து விவாதம் செய் தார். நானும் அதனை பெரிதுபடுத்த வில்லை. ஆனால் அந்த இளை ஞர் வந்து மூன்று மாதத்திற்கு ள்வாடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெ றும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தி னை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தி னர் இப்போது நடத்துகின் றனர்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற் றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணு குமுறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...