Monday, December 22, 2014

மானிய சிலிண்டர் – பெறும் வழிமுறைகளும் – அதிலுள்ள‍ சந்தேகங்களுக்குரிய விளக்கங்களும்!

மானிய சிலிண்டர்- பெறும் வழிமுறைகும்- அதிலுள்ள‍ சந்தேகங்களுக்குரிய விளக்கங்களும்!
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சி களின் வாசலில், நீண்ட வரிசையில்
காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்கு ள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக் காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்கவேண்டும்’ என்று பரவி க்கிடக்கும் தகவல்தான் காரணம்.

சிலிண்டருக்கான மானியம் தொ டர்பாக அதிரடி வேலைகளில் மத் திய அரசு இறங்கியிருப்பது என்ன வோ உண்மைதான். ஆனால், அதி ல் என்ன நடக்கிறது என்பது சரி வர தெளிவுபடுத்தப்படாததால்… மக்கள் படாதபாடுபட்டுக் கொண் டு ள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவத ற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?
 
சமையல் எரிவாயுக்காக தற்போ து வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல் லை யென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப் படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவ றாகவும்பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட் ட நஷ்டம் என்பதால், எரிவா யு சிலிண்டருக்கான மானிய த்தைநேரடியாக நுகர்வோரி ன் வங்கிக்கணக்கில் மத்தி ய அரசு செலுத்தப்போகிறது. இத்திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலிலிருக்கிறது. அடுத்த கட்டமா க, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்படஇருக்கி றது.

ஒரு குடும்பத்துக்கு வருடத் துக்கு 12 சிலிண்டர்கள் மா னிய விலையில் தரப்படும். உங்களுக்கானசிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழு விலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலு க்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக் கும், மானிய விலைக்குமான வித்தியாச ம் சலுகைப்பணமாக அடுத்த 48மணி நே ரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆதார் எண் அல்ல து வங்கிக் கணக்கு என இரண்டு வழி கள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கண க்கு முக்கியம்.

ஆதார் எண் வைத்திருப்போர்! ஆதார் எண் வைத்திரு ப்பவர்கள், அதை வங்கிக் கணக் குடன் இணைக்க வேண்டும். இத ற்காக, விண்ணப்பத்தை (படிவம் -1)பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடை ய சமையல் எரிவாயு ஏஜென்சி யுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற் கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர் ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற் றும் இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல் லது கேஸ் புக்கின் முதல்பக்க நக லை ஏஜென்சியிடம் சமர்ப்பி க்க வேண்டும்.

அதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலை பேசி எண் வாயிலாக 1800- 2333 -555பதிவுசெய்யலாம். இண்டேன் வாடி க்கையாளர்கள் 8124024365 என்ற தொ லைபேசி எண்மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கா ன தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழு த்தினால், இத்திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.

இணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவுசெய்யலாம். இதற்கு, https:// rasf.uidai.gov.in/ என்றமுகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வும் இணையலாம்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள்!

ஆதார் அட்டை இல்லாதவர்க ள், தங்களுக்கு எந்த வங்கியி ல் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முக வரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC’ கோட்  எண் ணை  உங்கள் விநியோகஸ்தரி டம் கொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூ ர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார் கள். அல்லது விநியோகஸ்தர்களி டம் விண்ணப்பம் 3 பெ ற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன்பின் மானி யத்தொகை உங்கள் வங்கிக் கணக் கில் சேரும்.

பெயர் மாற்றம் அவசியம்!

சிலிண்டர் இணைப்பு யார் பெயரி ல் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்கவேண்டிய து கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இ ணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவ ர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர்கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

காலக்கெடுவும் கருணை அடிப்படையும்!

ஜனவரி 1, 2015 முதல் இத் திட்டம் நாட்டின் அனைத் து மாவட்டங்களிலும் அம லுக்கு வருவதால், அதற் குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணை யாதவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்குகருணை அடி ப்படையில் மானிய விலை சிலிண் டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத் தி இணைந்துவிட வேண்டும். இல்லை யென்றால், மானியவிலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இத்திட் டத்தில் இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இரு ப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு  mylpg.inஎன்ற ஆன்லைன் முகவரிக் கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்ப ட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத் தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியா முழுக்கவே 8000 பேர்!

மானியவிலைசிலிண்டர்தேவையில்லாதவர்கள்,ஆன் லைன் வழியாக  mylpg.in என்ற முகவரியில் டி என் எஸ் சி  (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSE HOLD CYLINDER)  என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று கு றிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜெ ன்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவ தும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷ னை தேர்ந்தெடுத் துள்ளார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...