அனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ்பாலிசிகள்!
பரபரப்பாக இயங்கும் உலகமிது. இதில் யாருக்கு எப்போது எப்படி பிர ச்னை வரும் என்று சொல்ல முடியா து. குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை தலை கீழாக மாறிவிடும். அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பி னால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வரு மானம் தடை படும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே
கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டா யம் அக்குடும்பத்தினரின் மேல் விழுந்து, மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும்.
இப்படி ஒரேசமயத்தில் பண நெருக்கடியும், மனநெருக் கடியும் ஏற்பட்டு அந்தக் கு டும்பத்தினரின் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நி லையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூ ரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறு க்க முடியாத உண்மை.
எனவே, ஒவ்வொரு தனி மனித னும் கட்டாயம் வைத்திருக்க வே ண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை எந்த வகை யில் வாழ்க்கைக்கு உதவும் என்ப து குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.
1. லைஃப் இன்ஷூரன்ஸ்!
திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது. இதற்காக திருமணமாகாதவர்களு க்கு இந்த பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனி நப ரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரி கள் இருந்தா ல் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பா லிசியில் டேர்ம் பாலிசி, முழு ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூர ன்ஸ் தான், குறைவான பிரீமிய த்தில் அதிக கவரேஜ் தரும் பாலி சியாக இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவ ரை, அசம் பாவிதம் ஏற்பட்டால் ம ட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக் காது.
பொதுவாக, இந்த லைஃப் பாலி சியின் கவரேஜ் தொகையானது ஒருவரது ஆண்டு வருமானத் தைப்போல் 10-லிருந்து 12 மடங் கு இருக்குமாறு எடுத்துக்கொள் வது நல்லது. உங்களது ஆண்டு வருமானம் சுமார் 4 லட்சம் ரூபா ய் எனில், நீங்கள் குறைந்தது 40 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுப்பது நல்லது.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை முடிந்தவரை இளம் வயதிலே யே எடுத்துக்கொள்வது நல்லது. ஏ னெனில், வயது அதிகமாக அதிகமாக உடல் பிரச்னைகள் அதிகமாகும். உட லில் பிரச்னை இருக்கும் சமயத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைப்பது கடி னம்.
உதாரணத்துக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் உங்கள் வாழ்க்கை அதிக ரிஸ்க் கொண்டதாக மாறி விடும். அப்போது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க நினை த்தால், அது கிடைக்காமலே போக வாய்ப்பு அதி கம். அப்படியே கிடைத்தாலும் பிரீமி யம் மிக மிக அதிகமாக இருக்கும்.
எனவே, இளம்வயதில் ஆரோக்கியமாக இருக்கும்போதே இன் ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே புத்திசாலித்தனம். மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கு ம்போது விபத்துக் காப்பீட்டுட ன் கூடிய பாலிசிகள் கிடைக் கின்றன. இதைத் தேர்ந்தெடுப் பது நல்லது. ஏனெனில், விபத் தினால் மரணம் ஏற்படும்போ து இரு மடங்காக கவரேஜ் தொகை கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகத்தான் என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள்ளுங்கள். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்பாலிசியோடு, சேமிப்பு மற்றும் முதலீடு என்று உங்களை திசை திருப்பு வதற்கான வாய்ப்புகளு ம் உள்ளன. இந்தவகை பாலிசிகளில் ஆண்டுக் கு சுமார் 5-6 சதவிகிதம் தான் வருமானம் கிடை க்கவே வாய்ப்புண்டு. எனவே, முடிந்தவரை இந்த வகையான பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.
2. கடனுக்கான இன்ஷூரன்ஸ்!
இன்றைய நிலையில் கடன் வாங்காமல் யாருமே இருக்க முடியா து. அடிப்படை தேவைகளில் ஒன்றாக கடன் மாறிவிட்டது. வீடு, கார் போன்றவற்றை நாம் கடன் வாங்கித்தான் வாங்குகி றோம். இதில் வீட்டுக்கடன் என் பது நீண்ட கால கடனாக இருக் கும் என்பதால் மாதாமாதம் இ. எம்.ஐ. மூலம் கடனை திரும்பக் கட்டுவோம். இச்சூழ்நிலையில் எதிர்பாராத விபத்து, மரணம் ஏற்படும்போது குடும்பத்தினர் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இதுபோன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க ஒருவர் கடனாக வாங்கியத் தொ கைக்கு ஈடாக ஆயுள் காப்பீடு பாலிசியை எடுப் பது அவசியம்.
அதாவது, எதிர்பாராதவிதமாக கடன் வாங்கியவருக்கு மரணம் ஏற்பட்டால் அந்தக் கடன் சுமை யிலிருந்து குடும்ப உறுப்பினர்க ள் விடுபட முடியும். கடன் வாங் கியவர் மரணமடையும் நிலையில், அப்போது நிலுவையில் உள்ள கடன் தொகையை இன்ஷூர ன்ஸ் நிறுவனம் வங்கிக்கு தந்துவிடு ம். கடன்தொகை குறைய குறைய க வரேஜும் குறைகிற மாதிரி பாலிசிக ள் உள்ளன. இதில் பிரீமியம் குறைவா க இருக்கும். இந்த பாலிசி கல்விக் கடன், கார் கடன் , வீட்டுக் கடன் என நீண்டகால கடன்களுக்கு கிடைக்கு ம்.
3. ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
பல நாட்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேமிப்பு அனைத்தும் ஒரு வியாதி வந்தாலே கரைந் துவிடும். விபத்து ஏற்பட்டு அத னால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது, திடீரென ஏற்படும் உடல் நலக் குறைவு போன்ற சமயங்களில் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி அவசியம்.
இந்த இன்ஷூரன்ஸில் மருத்து வச் செலவு களுக்கு இழப்பீடு பெற முடியும். அதுவும் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு குறைந் தபட்சம் 24 மணி நேரம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சமய த்திலும், அறுவை சிகிச்சை சமயத் திலும் இழப்பீடு கிடைக்கும். இதை தனிநபர், ஒட்டுமொத் தக் குடும்பம், மூத்தக் குடிமக்கள் என அனைவரும் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிற து. இந்த பாலிசியையும் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே எடு த்துக் கொள்வது நல்லது.
பெரிய நிறுவனங்களில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கும் .இந்தவகை இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் ஒரு நிறுவனத்தி ல் வேலை பார்க்கும் வரை தான் கவரேஜ் கிடைக்கும். அ ந்த வேலையை விட்டுவிட்டு அ டுத்த வேலைக்கு மாறும்போது அந்த நிறுவ னத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தால்தான் அதில் நீங்கள் சேரமுடியும்.
உதாரணமாக, நீங்கள் 40 வயதில் வேலை மாறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன் ஸ் இல்லையென்றால், நீங்கள் தனியாகத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் குறிப்பி ட்ட காலத்திற்கு கிடைக்காது. இச்சூழ்நிலையில் இன்ஷூரன் ஸ் எடுத்தும் அது உங்களுக்கு முழுமையாகப் பயன்படாது. எ னவே, நிறுவனங்களின் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தாலும் நீங் கள் தனியாக சில லட்சம் ரூபாய் க்கு ஹெல்த் பாலிசி எடுத்து வைப்பது நல்லது. கூடுதல் கவரேஜ் தேவைப்பட்டால் டாப்அப் செய்துகொள்ளலாம்.
இந்த பாலிசியை எடுத்தால் மட் டும் போதாது. உங்களின் மருத்து வத் தேவை என்ன? நீங்கள் எடுத் து வைத்திருக்கும் பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு, குரூ ப் இன்ஷூரன்ஸ் எனில் அதனு டைய கவரேஜ் தொகை எவ்வள வு, எந்தெந்த சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடைக்கும், கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை எல்லா ம் முன்கூட்டியே தெரிந்து வைத் துக் கொள்வது அவசியம். எப்போ தும் இன்ஷூரன்ஸ் ஆவணங்க ளைப் பாதுகாப்பாக வைத்திருப்ப து அவசியம். மேலும், அந்தத் தக வலை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம். இப்படி செய்யும்போது எந்த சூழ்நிலையி லும் உங்கள் குடும்பம் பாதுகாப் பாக இருக்கும்.
4. வீட்டு உரிமையாளர் பாலிசி!
வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) என்ப து, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டடத்திற்கு சேர்த்து கவரேஜ் கிடைக்கும். இதில் தங் கம், வெள்ளி, விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்திற் கும் கவரேஜ் கிடைக்கும். இந்த பாலிசிக்கு, நீங்கள் இன்ஷூர ன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக் கும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்குமட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். கட்டடத்துக் கு எடுக்க முடியாது. சொந்த வீடு என்கிறபோது, கட்டடத்து க்கு எடுக்கும் கவரேஜுக்கு நிலநடுக்கம், நிலச்சரிவு, தீவி ரவாதிகள் தாக்குதல், மழை வெள்ளத்தால் பாதிப்பு, திருட் டு போன்ற சமயத்தில் இதில் க்ளைம் பெற முடியும்.
வீட்டு உரிமையாளர் பாலிசி யில் கவரேஜ் செய்துள்ள பொருட்கள் வாங்கியதற் கான ரசீதுகளைப் பாதுகாப் பாக வைத்திருப்பது அவசிய ம். ஏனெனில், ஏதாவது பாதி ப்பு ஏற்பட்டு க்ளைம் செய்யும் போது அந்தப் பொருளின் உ ண்மையான மதிப்பைத் தெரி ந்துகொள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்த ரசீதை கேட் க வாய்ப்பு உள்ளது. அதாவது, அதிக மின் அழுத்தத்தால் உங்களி ன் டி.வி. பழுதடை யும்போது, உங்கள் டி.வி.க்கான மதிப்பைத் தெரிந்துகொள்ள அதை வாங்கி யதற்கான ரசீதைக்கேட்பார்கள். எனவே, க்ளைம் கேட்கும் போ துதான் சிக்கல் வரும்.
5. வாகன இன்ஷூரன்ஸ்!
இன்று வாகனம் இல்லாத வீடுகளே இல்லை. இந்திய வாகனச் சட்டப்படி, மூன்றாம் நபர் இன்ஷூ ரன்ஸ் என்கிற தேர்டு பார்டி இன் ஷூன்ஸ் எடுப்பது கட்டாயம். இந் த இன்ஷூரன்ஸ் இல்லாமல் வா கனம் ஒட்டக் கூடாது. மேலும், பி ரீமியத்தைக் குறைக்க வாகனத் தின் மதிப்பைப் பலரும் குறைத்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் க்ளைம் -க்குப் போகும்போது வாகனத்தின் உண்மையான மதிப்பு இழப்பீடுகிடைக்காது. எனவே, பிரீமியத் தில் 100, 200 ரூபாய் மிச்சப்படுத் துவதற்காக பல ஆயிரங்களை இழக்க நேரிடும்.
இந்த இன்ஷூரன்ஸ் அனைத்து ம் கட்டாயம் வாழ்க்கைக்கு அவ சியமான ஒன்றாகும். எனவே, இ ந்த பாலிசிகள் எல்லாம் உள்ள தா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்” என்று முடித்தார்.
No comments:
Post a Comment