Tuesday, December 9, 2014

அப்பாவை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாமே அழகிரியிடம் எடுபடாத தயாளு கோரிக்கை



அப்பாவை சந்தித்தால், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு விடுமே' என, அழகிரியிடம் தயாளு சொல்ல, 'நான் வரும் தகவல் அறிந்து, ஓடி ஒளிபவரை சந்திக்க தேவையில்லை' என, அழகிரி கொந்தளித்திருக்கிறார்.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, அழகிரி விஷயத்தில் சமரச முடிவு எட்டப்படாமல், இழுபறியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, கட்சியில் பொருளாளர் ஸ்டாலின் கை ஓங்கியது. அவரது தலைமையை ஏற்று, எல்லா மாவட்டங்களிலும் கட்சியினர் ஒன்றிணைந்தனர். அழகிரிக்கு ஆதரவு அதிகம் உள்ள, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.,வினரும், ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர்.இதை பயன்படுத்தி, கட்சியை தன் வசம் கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஸ்டாலின் இறங்கினார். அதில் பெற்ற வெற்றியை பாதிக்கும் விதத்தில், தற்போது உள்கட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக, குமுறல்கள் கேட்கத் துவங்கி உள்ளன.மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும், தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே, பதவி என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். இதனால், பல மாவட்டங்களில் தேர்தல் நியாயமாக நடத்த முடியவில்லை என்பதால், மா.செ.,க்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்த சூழலில், தி.மு.க.,வில் மீண்டும் இணைவதை அழகிரி விரும்பவில்லை. அதனால், குடும்பத்தினரை சந்திக்க அழகிரி விரும்பாமல், தாயாரை மட்டும் சந்தித்தார் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் மேலும் கூறியதாவது:தொண்டை வலி காரணமாக, கடந்த ஒரு வாரமாக, சென்னையில் பிரபல காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரிடம் அழகிரி சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர் சென்னையில் தங்கியிருந்தார். இந்த தகவல் தெரிய வந்ததும், அவரிடம், தாயார் தயாளு தொலைபேசியில் நலம் விசாரித்தார்.இதனால், தாயாரை மட்டும் சந்தித்தார், அழகிரி. முன்னதாக, அழகிரி வரும் தகவல் அறிந்ததும், கருணாநிதி, கோபாலபுரத்தில் இருந்து சி.ஐ.டி., காலனிக்கு சென்று விட்டார். 'அப்பாவை சந்தித்தால், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு விடுமே' என, அழகிரியிடம் தயாளு சொல்ல, 'நான் வரும் தகவல் அறிந்து, ஓடி ஒளிபவரை சந்திக்க தேவையில்லை' என, அழகிரி கொந்தளித்திருக்கிறார்.கட்சி இருக்கும் நிலையில் நான், மீண்டும் கட்சி பக்கம் வருவதற்கும் விருப்பம் இல்லை எனவும் சொல்லி இருக்கிறார் அழகிரி.அதனால், இப்போதைக்கு அழகிரி கட்சியில் இணைய வாய்ப்பில்லை.இவ்வாறு, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...