சாதனை படைக்க நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள் - சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட
ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று
ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று
சொல்லப்படுகிறது. சாதனையா ளர்களின் குணங்கள் மற்றவர்க ளைவிட சற்று வேறுபட்டே இரு க்கின்றதுஎன்பதுதான் உண்மை. அப்படி இருக்கையில் வெற்றி மனிதர்களிடம் காணப்படும் விசேஷ குணங்கள்தான் என்ன என்பதைச் சற்று ஆராய்ந்துப் பார்ப்போம்.
சாதனையாளர்கள் உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள்
உணர்வுக்குக் கட்டுப்படும் இவர்களது முதல் குணமே மற்றவர்களை விட இவர்க ள் வேறுப்பட்டிருக்கக் கார ணமாய் உள்ளது. அவர்க ளைப் பொருத்த வரை ஒரு காரியத்தில் ஈடுபட அதனை உணர்வுப்பூர்வமாக அணு குவது, அறிவுப்பூர்வமாக அணுகுவதைவிட முக்கிய மானது. இதனால்,வெற்றி மனிதர் கள் ஒருகாரியத்தில் ஈடுபடுகை யில் அதை முழுமையாக விரும் பிச் செய்வார்கள். சால்ஸ் டார்வி ன், ஆல்பெர்ட் என்ஸ்டைன்போன் ற பல சாதனை மனிதர்கள் அவர்க ளது இளமை பருவத்தில் படிப்பில் பின் தங்கியவர்க ளாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சாதனையாளர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ப்பற்றிக்கவலை கொள்வதில்லை
சாதனையாளர்கள் எப்பொழுதுமே தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவின் எல்லையை நன்கு அறி ந்தவர்களாக இருப்பர். அவர்கள் மற்றவர்களின் கருத்தைக் கேட்பார்களேத் தவிர, மற்றவர்களை முடி வெடுக்கவிட மாட்டார்கள். தாங்கள் விரும்பும் தொழிலி ன் முன்னேற்றத்திலேயே அ வர்களது கவனம் இருக்கும். மற்றவர்களின் தேவையில் லா விமர்சனத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.
சாதனையாளர்கள் தங்கள் செயல் திறனை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள்
ஒருமனிதன் தன் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள, அவன து படைப்பாற்றல், செயல்திற ன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியம். இதைத்தான் சாதனை மனிதர்க ள் செய்கின்றனர். அவர்கள் சற்று சோர்ந்து போகும் போதெல்லாம் தங்கள் ஆற்றலை மேம்படுத்தும் பலவித நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். அது அவர்களின் தொழில் சம்பந்தப்ப ட்டதாக இருக்க வேண்டிய அவசி யம் இல்லை. ஆனால், அவர்களு க்குப் பிடித்ததாய் இருத்தலே அவசியம்.
சாதனையாளர்களுக்குத் தங்களின் தனியுரிமையைத் தற்காத்துக் கொள்ள முடியும்
இந்நவீன காலக்கட்டத்தில் கை தொலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கி ன்றது. நமக்குஉதவியாக இரு க் கவேண்டிய இத்தொலைப்பே சி, நமக்குச் சில சமயங்களில் அதிகத் தொல்லைத் தரும் ஒன்றாக அமைந்து, நம் வேலையையும் பாதிக்கின்றது. இதனால்தான், சாத னைமனிதர்கள் பலர்வேலை நேரங்களின்போது தங்களது தொலைப்பேசியை அடைத்து விடுகின்றனர். இவர்களில் சிலர் ஸ்மார்ட்போன் போன்ற நவீனக் கைத்தொலைப் பேசி யைப் பயன்படுத்துவதில்லை . இருப்பினும், அவர்களுக்கும் வெளியுலகத் தொடர் புக்கும் எப்பொழுதுமே துண்டிப்பு வந்ததில்லை.
சாதனையாளர்கள் கவனம் சிதறா மல் இருப்பார்கள்
சாதனை மனிதர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களது கவனம் முகவும் முக்கியப் பங்களி க்கிறது. தங்களது கவனம் சிதறா மளிருக்க, தனி அறையில் வேலைசெய்தல், தியானித் தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றுவர். எதற்குமே அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். அவர்களின் எண்ணம் முழுக்கத் தாங் கள் ஈடுப்படும் தொழிலைப் பற்றியே இருக்கும்.
சாதனையாளர்கள் தங்கள் முதல் வெற் றியில் நிலை த்திருக்க மாட்டார்கள்
சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் சாதித்திக் கொ ண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் முதல் வெற்றி க்குப்பிறகு ஓய்ந்துவிட மாட்டா ர்கள். வெற்றிப் பாதையை நோ க்கி ஓடிக் கொண்டேயிருக்கும் இவர்கள், புதுப்புது காரியங்களி லும் ஈடுப்படுவார்கள். இதற்கும் மேலாக, அவர்கள் வெற்றிக்கா க எந்தவித சவாலையும் எதிர்க் கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
மேற்கூறிய குணங்கள் உங்களிடமும் உள்ளதா? அப்படியென்றால் நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்!!
No comments:
Post a Comment