சபரிமலை பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி பண மோசடி நடைபெற்று வருவதை தேவசம்போர்டு கண்டு பிடித்து பல்வேறு இணையதளங்களை முடக்கியுள்ளது. பக்தர்கள் சபரிமலைக்கு காணிக்கை செலுத்தும் போது கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலை தொடர்பான எல்லா ஏற்பாடுகளும் நேரடியாகவே நடத்தப்பட்டு வந்தது. அறை வேண்டுபவர்கள் சன்னிதானம் சென்றால் மட்டுமே பெற முடியும். வழிபாடு நடத்த வேண்டுமெனில் நிர்வாக அலுவலகத்தில் சென்று பணம் கட்டினால் மட்டுமே உறுதி செய்யமுடியும்.
பிரசாதம் வாங்குவதும் நேரடியாக மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் அறைகள் முன்பதிவு ஆன்லைனில் மாற்றப்பட்டது. www.sabarimalaaccomodation.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சபரிமலையில் மொத்தம் உள்ள அறைகளில் 30 சதவீதம் அறைகள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. இது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் கணபதிஹோமம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம் போன்ற சில வழிபாடுகளுக்கு ஆன்-லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. அப்பம், அவரணை பிரசாதங்களும் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்கும் இந்த இணைய தளத்தில் லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆன்-லைனில் புக்கிங் செய்பவர்களுக்காக வழிபாடுகள் நடத்தப்பட்டு, அதற்கான பிரசாதம் ஆன்-லைன் பிரசாத கவுண்டரில் வைக்கப்பட்டிருக்கும். இதுபோல www. travancore devaswomboard.org இணையதளமும் சபரிமலையின் அதிகார பூர்வ இணையதளமாகும். ஆனால் அன்னதானத்துக்கு நன்கொடை பெறுவதற்கு தேவசம்போர்டு இணையதளத்தில் வசதி செய்யவில்லை.
இதை பயன்படுத்தி சிலர் சபரிமலை ஐயப்பன் பெயரில் இணையதளங்களை உருவாக்கி அன்னதானம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபடுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக சைபர்கிரைம் போலீசுக்கு புகார் அனுப்பி பல இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சபரிமலை தொடர்பாக ஆன்லைனில் செல்லும் போது அது தேவசம்போர்டின் அதிகாரபூர்வ இணையதளம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment