Wednesday, December 10, 2014

தொடர்ந்து இரண்டாவது முறையாக கொடிநாள் வசூலில் மாநிலத்தில் திருச்சி முதலிடம்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் கொடிநாள் வசூலில் 2013-14ஆம் ஆண்டில் இலக்கைத் தாண்டி ரூ. 2.82 கோடி வசூலித்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது திருச்சி மாவட்டம். இந்தச் சாதனையை இரண்டாம் முறையாக திருச்சி தக்க வைத்துள்ளது.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிநாள் தேநீர் விருந்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியது:
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கொடிநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2011-12ஆம் ஆண்டில் மாவட்டத்தின் இலக்கு ரூ. 33 லட்சம். நாம் ரூ. 1.38 கோடி வசூலித்து மாநிலத்தின் இரண்டாமிடத்தைப் பிடித்தோம்.
2012-13ஆம் ஆண்டில் இலக்கை விஞ்சி ரூ. 2.28 கோடி வசூலித்தோம். மாநிலத்தில் முதலிடம் கிடைத்தது. தற்போது 2013-14ஆம் ஆண்டிலும் இலக்கை விஞ்சி ரூ. 2.82 கோடி வசூலித்து மாநிலத்தின் முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளோம் என்றார் ஜெயஸ்ரீ.
மாவட்ட அளவில் அதிக நிதி வசூலித்து முதலிடம் பெற்ற கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ந. மிருணாளினி, இரண்டாம் இடம் பெற்ற பதிவு அலுவலக துணைப் பதிவாளர் சிந்தனைச் செல்வன், மூன்றாம் இடம்பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் ந. ஆனந்தி ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து முன்னாளஅ படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 48 பேருக்கு ரூ. 3.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், 117ஆவது பட்டாலியன் நிலைய அலுவலர் வி. திவாரி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சோ. செல்வமூர்த்தி, படைவீரர் நல அமைப்பாளர் சேதுமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...