வெளிநாட்டில் கல்வி என்றாலே பலருக்கும் சந்தோஷம் தொற்றிக்கொள்ளும். வெளிநாடு சென்று படிப்பதில் உள்ள சுவாரஸ்யம், வெளிநாட்டு அனுபவம், சிறந்த சூழல், தரமான கல்வி, சர்வதேச வாய்ப்புகள் என சந்தோஷத்திற்கான காரணம் பல.
மறுபுறம், வெளிநாட்டுக் கல்வி என்றாலே ஒரு தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு முக்கிய காரணம், பல்வேறு விதமான செலவுகள். வெளிநாட்டில் கல்வி கற்க ஆகும் செலவினங்களை ஓரளவு சமாளிக்க உதவுகிறது பகுதிநேர பணி.
பணி நேரம்
மாணவர்கள் படித்துக்கொண்டே பகுதிநேர பணியில் ஈடுபட பெரும்பாலான நாடுகள் அனுமதிக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை, வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரங்கள் வரை பணிபுரிய, வெளிநாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதர நாடுகளிலும், இந்த அனுமதி வேலைநேரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

கனடாவில், கல்லூரி நாட்களில் வாரத்திற்கு 20 மணிநேரங்களும், விடுமுறை நாட்களில் 40 மணிநேரங்களும் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் பெரியளவு மாற்றங்கள் இல்லை என்ற போதிலும், விதிமுறைகளில் வேறுபாடு உள்ளது.
எங்கே பணிபுரியலாம்
வெளிநாட்டு மாணவர்களுக்கான பகுதிநேர பணி, கல்வி நிறுவன வளாகத்திற்கு உள்ளே (on campus ) மற்றும் வெளியே (off campus ) என இரண்டாக பிரிக்கலாம்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான பகுதிநேர பணி, கல்வி நிறுவன வளாகத்திற்கு உள்ளே (
வளாகத்திற்குள் நூலகம், ஆய்வகம், உணவகம் மற்றும் சேர்க்கை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறான இடங்களில் வெளிநாட்டு மாணவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். வளாகத்திற்கு வெளியே ரெஸ்டாரண்டுகள், ஸ்டோர்ஸ் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியலாம். முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே பேராசிரியர்களுக்கான உதவியாளர் உள்ளிட்ட பணி வாய்ப்பை பெறலாம்.
எவ்வளவு கிடைக்கும்
அமெரிக்காவில், ஒரு மணிநேர வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் 8.25 அமெரிக்க டாலர்கள். வாரத்திற்கு 20 மணிநேரங்கள் என்ற கணக்கில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணிசெய்தால் கூட, மாதம் 660 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்க முடியும். எனினும், இந்த வருமானத்திலிருந்து முழு வெளிநாட்டு படிப்பிற்கான செலவினங்களையும் சமாளிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பகுதிநேர வருமானத்தை மட்டும் முழுவதுமாக நம்பியே வெளிநாடுகளில் கல்வி கற்க இயலாது. ஏனெனில் பொதுவாக, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கும். எனவே பகுதிநேர பணி வருமானத்தில் தங்கும் செலவு, உணவு, இதர செலவுகளை வேண்டுமானால் ஓரளவு ஈடுகட்டலாம்.
No comments:
Post a Comment