கூகிள் நிறுவனம் இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.
முதலில் இந்த தளம் Google Flights சென்று நீங்கள் கிளம்பும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இவைகளை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும்.
இதில் உள்ள விவரங்கள் உங்களுக்கு தேவையான வகையில் மாற்றி கொடுத்து விமானங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப உள்ள விமானங்கள் உங்களுக்கு பட்டியலில் தெரியும்.
No comments:
Post a Comment