பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத்தெ ரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ் சா போதும், சூப்பர் பர்சன லாட்டி ஆகிடலாம்” என் று நம்புகிறார்கள்.
“நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான் சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!”
‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால்
சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது
இப்படிப்பட்ட விமர்சனங்க ளெல்லாம் ஒருவரைப்பார்த் து மற்றவர் சொல்கிறார் என் றால் கேட்பவர் கவனக்குறை வு உள்ளவர் என்று அர்த்தம் கொள்ளலாம்.
இந்தச் சூழல்களை மாற்றி ‘ப ர்சனாலிட்டி’யை வளர்த்துக் கொள்வதற்கான எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அவ்வ ற்றுள் சில வற்றை காண்போம்.
1. உடல் அசைவுகள் (Body Language) கவனியுங்கள்
ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை (Facial Expression) எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவர் சிரித்துக் கொண்டு பேசுகிறாரா? கோபத்தில் பேசுகி றாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலுடன் பேசுகிறா ரா? அன்புடன் பேசுகிறாரா? என்பதை அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொள் ளலாம்.
‘Face is the Index of mind’ என்றது ஆங்கிலத்தில் பிரபலமா ன கருத்தாகும். அதாவது, ‘ஒரு ம னிதனின் முகம், அவரது மனதின் பிரதிபலிப்பாக அமைந்துவிடும். இதன்மூலம் நம் மனதின் தன்மை யை மற்றவர்கள் எளிதில் அறிந் துகொள்வார்கள்’ என்பது அதன் உட்கருத்தாகும்.
‘அவன் என்னைப் பார்த்து ‘ஏய்’ என்றுதான் சொன்னான். அவ ன் அந்த வார்த்தையை சொல்லும் போது அவன் முகமே சரி யில் லை’ என்று சிலர் வருத்தப் படு வதை இன்றும் காணலாம்.
இங்கு, வார்த்தைகளுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதற்கு பதில் முக அசைவுகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு விளங்கும். சில நேரங்களில் வார்த்தைகளால் விவ ரிக்க வந்த கருத்தைவிட, ஒருவரது உடல் அசைவுகள் கொடுக்கும் கருத்துக்கள் விரி வான விளக்கம் அதிகமாகவே இருக்கும்.
முக பாவணையை போலவே ஒரு வர் நிற்கும்விதம், நடக்கும் விதம், வார்த்தைகளை உபயோகிக்கும் முறை, கை, கால், கண் அசைவு கள் ஆகிய உடலிலுள்ள பாகங்க ளின் அசைவுகளும் தகவல்களுக் கு வெவ்வேறு அர்த்தங்களை தெ ரிவிக் கின்றன.
எனவே ‘உடல் அசைவுகள்’ பற்றி தெரிந் துகொண்டு, கேட்கும் போதே தகவல்க ளின் அர்தத்ததை புரிந்துகொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெறும் வார்த்தைக ளை மட்டும் கேட்டு அர்த்தம் கொண்டால் முழுமை யான அர்தத்தை புரிந்துகொள் ள இயலாது. அதேநேரத்தில் ஒருவரது உடல் அசைவுகளையும், கருத்தில் கொ ண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்ளும்போது அத்தகவலை முழுமையாக புரிந்துகொள்ள இ யலும். சில வேளைகளில் மவுன ங்களே வார்த்தை களாக மாறி பதில்களைத் தெரிவிக் கும்.
‘நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே நீ சினிமாவுக்கு ஒருகி றாயா’ என்று கேட்டான் நண்பன். ராஜேஷ் அமைதியாக நின்றான்.
‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி. ராஜேஷ் ‘எஸ்’ சொல்லி விட்டான்’ என்று சொன்னான் நண்பன்.
இப்படி சொல்லாத வார்த் தைகளுக்கு கூட அர்த்தம் கண்டு கொள் பவர்கள் உண்டு.
ஒருவர் ஒரு தகவலைத் தரும்போது சுவாரஸ்யம் இல்லா மல் அந்தத் தகவலை கேட்ப தை தவிர் க்க வேண்டும்.
எனவே பெர்சனாலிட்டியை வ ளர்த்துக்கொள்ள விரும்புவர் கள் உடல் அசைவுகளில் அதிக கவனம்செலுத்தி தகவல்களை ப் பெறுவது நல்லது.
2. மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி தேவை
மனம் எதைப் பற்றி அதிக ஆர் வம் செலுத்துகிறதோ அதைப் பற்றி தகவல்களை அதிகம் தெரிந்துகொள்வதற்கு பலரு ம் கவனம் செலுத்துவார்கள். அதனை கூர்ந்து கவனிப்பார் கள். ஒருதவகைல் கூர்ந்து கவனிப்பதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது ‘மனதை ஒருமுகப்படுத்துதல்’ (Concentration of mind)ஆகும். இதற்கு ஒலிகள் (Sounds) மன தில் ஏற்படுத்தும் மாற்றங்க ளைப் பற்றி சிந்திக்க வேண் டும். ஒலியின் தன்மைக்கு ஏற்ப கூர்ந்து கவனிக்கும் தன்மை உரு வாகும்.
வீட்டில் முன் அறையில்பலரோ டு அரட்டை அடிக்கும் ஒலி அதிக மாக இருந்தாலும், தனதுகுழந் தையின் அழுகைச் சத்தம் தாய்க் கு மட்டும் தனியாக கேட்டுவிடு கிறது அல்லவா?
வகுப்பறையில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நட்டும்போதுகூட சில மாணவர்கள் அதனை கவனிப்பதற்கு தயாராக இருப்பதில்லை. அந்த ஆசிரியர் மீதுள்ள கோபம், அந்த ஆசிரயரு க்கு ஒன்றும் தெரியாது என்ற எண் ணம், அவருக்கு ரசிக்கும்படி பேசத் தெரியாது என்னும் கருத்து, இந் தப் பாடம் அறுவை என்கின்ற சிந்த னை–போன்றவையெல்லாம் மா ணவ – மாணவிகள் பாடத்தைகவ னமாக கேட்பதற்கு தடையாக அ மைந்து விடுகிறது. இங்கு மாணவ ர்கள் கூர்ந்து கவனிப்பதற்கு தடை யாக இருப்பது அவர்களது மன நி லைதான் என்பதை புரிந்துகொண் டு நல்ல சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மனதை எளிதாக ஒரு முக ப்படுத்தலாம். இதன் மூலம் பெர்சனாலிட்டியை நன்றாக வள ர்த்துக் கொள்ள லாம்.
3. கருத்தைக் கவனியுங்கள்
தம்மோடு பேச வருபவர்கள் எந்தவித மான கருத்தை சொல்வதற்காக வருகி றார்கள் என்று கவனிக்க வேண்டும். அவர்கள் பேச்சின் ‘உட்பொருள்’ அல்லது ‘உட்கருத்து’ (Conte nt) எது? என்பதை கண்டறிவதற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாறாக, நம்மோடு பேச வந்தவர்களின் சொல்லும் விதத்தை (Delivery of Speech) கவனிப்பதை குறைத்துக் கொ ள்ள வேண்டும்.
ஒரு பேச்சுப போட்டியின் நடுவராக இருப்பவர் பேசுபவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொ டுத்து எந்த அளவுக்கு கவனிக்கிறாரோ அதே போன்றே உட்கருத்துக்கு முக்கிய த்துவம் கொடுத்து கவனிக்க வே ண்டும். புத்திக்கூர்மை சற்று கு றைந்தவர்கள்தான் பேச்சின் கரு த்தைகவனிக்காமல் சொல்பவ ரைப்பார்த்து கிண்டலடிப்பார்கள்.
‘பெருசா பேச வந்துட்டான். அவ ன் மூஞ்சியைப் பார்’, ‘மீச முளை க்காத பயலெல்லாம பேசுற பேச் சைப் பாரு’ என்று நேரடியாகவே பேச்சில் இடம் பெற்ற கருத்துக்க ள் பற்றி ஆராய்வதற்குப் பதில் பேசுபவரின் உடலிலுள்ள குறைபாடுகளை வைத்து விமர்சனம் செய்வது கவனத்தை சித றடிக்கும் செயலாகும்.
எனவே பேச்சிலுள்ள கருத்தை ஆழ்ந்து கவ னித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
4. ‘காது – வாய் உறவு’க ளை தெளிவு படுத்து ங்கள்
காது- வாய் உறவு – 2.1 விகிதம் (Ratio) அளவில் அமையுமாறு பார்த்துக்கொள் ளவேண்டும். அதாவது ஒவ்வொரு மனி தருக்கும் இரண்டு காதுகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு வாய்தான் இருக்கி றது.
இதன் அர்த்தம் என்னவென்றால் கேட்பது இரண்டு மடங்காக இருந் தால் பேசுவது ஒரு மடங்காக இரு க்கட்டும் என்பதை உணர்த்துவதற் குத்தான். ‘குறை குடம் கூத்தாடும்’ என்பார்கள்.
எனவே அறிவைப்பெருக்க வேண்டுமென்றால் பேச்சைக் குறைத்து தகவ ல்களை கவனித்துக் கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்க வது நல்லது.
5. திறந்த மனதோடு கேளுங்கள்
‘அவள் என்ன பேச்சு பேசுகிறாள்?’, ‘அவன் இந்த வார்த்தையை பேசி விட்டான்’ என்றெல்லாம் எண்ணி பேசுபவர் பற்றிய ‘எதிர் மறை உணர்வுகளை’ (Negative Emotions) வளர்த்துக் கொள் பவர்கள் உண்டு.
ஆனால் அதேவேளையில் வார்த்தைகள் என்பது கருத் துக்களை தெரிவிப்பதற்குத் தான் என்று எண்ணி பிறரின் பேச்சைக் கவனிப்பவர்கள் பேச்சின் முழுகருத்துக்களை யும் கவனிக்க வாய்ப்புள்ளது. திறந்த மனதோடு எந்த கவன ச்சிதறல்களும் இல்லாமல், பிறரின் பேச்சைக்கவனித்தால்பேச்சிலுள்ள அத்தனை கரு த்துக்களையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள வழி முறைகளெல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்துகவனிக்கவு ம், அதன்மூலம் நல்ல தகவ ல்களை மனதில் பதிய வை த்து பர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள உதவும்.
No comments:
Post a Comment