Thursday, December 25, 2014

அறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன்? வெளிவராத தகவல்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள், தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் முழு நேரமாக ஈடு பட மிகவும் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். அதற்கு வழிகோலும் வகையில் 1934ஆம் ஆண்டு கோய முத்தூர் மாவட்டம் திருப்பூரில்நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களை முதன்முறை யாக சந்தித்தார். பின் தந்தை பெரி யார் அவர்களின் கொள்கைகள் அனைத்தும் மிகவும் அண்ணா அவர் களை ஈர்த்ததன் விளைவாக பெரி யாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசி யல் பணியாற்றத் தொடங்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை
பத் திரிக்கையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திரா விட நாடு” என்ற தலைப் பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித் தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமணர்கள், வட இந்தி யர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947ஐ கறுப்புத்தினமாக அறிவிக்க தன து தொண்டர்களுக்கு அழைப் பு விடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண் ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரி ன் போராட்டத்தினாலும், விய ர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வட இந்தியர்களால் மட்டும் பெறப் பட்டது அல்ல என்றார், இதனால் இருவரு க்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு 1948ல் நடந்த “திராவிட கட்சியின் கட்சி” கூட்ட த்திலிருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டு மல்லாமல் பெரியா ர் தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆத ரவாளர்களும் திராவிட கட்சி யை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன் னேற்ற கழகம்” (தி. மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின்மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந் து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது. அந்த சமயத்தில் நடைபெற்ற‍ தேர்த லில் பெருவாரியான வாக் குகள் பெற்று தி.மு.க. அண் ணாவின் தலைமையில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த‍து. பின் அண்ணாவின் மறைவி ற்குப் பிறகு தி.மு.க.விலிரு ந்து எம்.ஜி.ஆர். நீக்க‍ப்ப‍ட் டு, கலைஞர் கருணா நிதி தலைமையில் தி.மு.கழகம் தற்போது வரையில் செயல் பட்டு வந்தது. தி.மு.கழகத்தில் இருந்து நீக்க‍ப்பட்ட‍ எம் .ஜி. ஆர். தான் அண்ணாமீது கொண்ட பாசத்தால் அண் ணா திரா விட முன்னேற்ற‍க் கழகம் என்ற பெயரில் ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...