பால் விலை உயர்வுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த, முதல்வர் பன்னீர்செல்வம், வசதி படைத்தோருக்கெல்லாம், அரசு மானியம் வழங்க வேண்டுமா என, கேள்வி எழுப்பினார்.பால் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்து, முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அதற்கு பதிலளித்து, முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பால் கொள்முதல் விலை, தனியார் பால் பண்ணைகளின் கொள்முதல் விலையை விட குறைவாக இருந்ததால், ஆவின் பால் கொள்முதல் குறைந்தது. இதை சரி செய்ய, பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது.
குறைவாக உள்ளது:
குறைவாக உள்ளது:
அதன் பிறகும், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய விலை, தனியார் பால் விற்பனை விலையை விடக் குறைவாக உள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, அக்., மாதம் 20.70 லட்சம் லிட்டர் என்ற அளவில் இருந்த, பால் கொள்முதல், தற்போது, 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. 'ஆவின்' பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதற்கு, கண்டனம் தெரிவிப்போர், தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்த்தியபோது, கண்டனம் தெரிவிக்கவில்லை. பால் விலை உயர்வை கண்டிக்கும், அரசியல் கட்சியினர், இதற்கு ஒரு சாத்தியமற்ற தீர்வை தெரிவிக்கின்றனர். அதாவது, விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும். அதே நேரத்தில், பாலின் விற்பனை விலை உயர்த்தக் கூடாது. அரசே, அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக, அரசு மானியம் வழங்கலாம். வசதி படைத்தோருக்கு வழங்க இயலாது. தமிழகத்தில், ஏழை மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், ஆவின் பால் விற்பனையில், ஏழை, எளியோர், வசதி படைத்தோர் என, பிரிக்க இயலாது. எனவே தான், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆவின் பால் விலை, தனியார் பால் விற்பனை விலையை விட, குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு வாங்குகின்றனர்?
எவ்வளவு வாங்குகின்றனர்?
கருணாநிதி, ஸ்டாலின், ஆகியோர் வீட்டில், தலா, 3 லிட்டர், தயாநிதி வீட்டில், மூன்றரை லிட்டர், அன்புமணி ராமதாஸ் வீட்டில், ஒன்றரை லிட்டர், தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில், ஒரு லிட்டர், வைகோ வீட்டில் மூன்றரை லிட்டர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில், ஒன்றரை லிட்டர், சவுந்தரராஜன் வீட்டில், 2 லிட்டர் என, பால் தினமும் வாங்கப்படுகிறது. இது போன்றே வசதி படைத்தோர் பலரும், தினமும் ஆவின் பால் வாங்குகின்றனர். இப்படி வசதி படைத்தோருக்கெல்லாம், அரசு மானியம் வழங்க வேண்டுமா என்பதை, உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வசதி படைத்தோருக்கு, மானியம் வழங்கப்படுவதை, ஏழை, எளிய மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உயர்த்தப்பட்டுள்ளது:
உயர்த்தப்பட்டுள்ளது:
எனவே தான், பால் உற்பத்தியாளர்களுக்கு, கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலை வழங்க வேண்டும். நுகர்வோருக்கான பால் விற்பனை விலை, அதற்கேற்ப உயர்த்தப்பட வேண்டும். தனியார் பால் விற்பனையை விட, ஆவின் பால், குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment