Thursday, January 5, 2017

ஆனால் கலைஞர் அஞ்சவில்லை, அசரவில்லை. செய்ய வேண்டிய காரியங்களை அழக்காக செய்தார்

முக ஸ்டாலின் செயல் தலைவர் ஆகிவிட்டார்
கட்சிக்காரர்கள் உட்பட பலர் வாழ்த்துகின்றனர், ஆனால் கலைஞரை தவிர குடும்பத்தார் யாரும் பாராட்டியதாக தெரியவில்லை
அழகிரி கனிமொழி சர்ச்சைகள் உண்டு எனினும் மாறன் சகோதரர்களை காணவே இல்லை.
இப்பொழுது அல்ல, கொஞ்ச காலமாகவே சத்தம் இல்லை. வழக்கிற்கும் குற்றசாட்டுகளுக்கும் அஞ்சுபவர்கள் இல்லை அவர்கள். யார் மீது தான் வழக்கு இல்லை?
கனிமொழி மீதும் உண்டு, ஆனால் பரபரப்பாக இருக்கின்றார். இந்த மாறன் சகோதரர்களுக்கு என்னாயிற்று?
இங்குதான் கலைஞரின் ராஜதந்திரம் புன்னகைக்கின்றது
அதாகபட்டது முரசொலிமாறன் என் மனசாட்சி என சொல்வார் கலைஞர், அது உண்மையும் கூட. கலைஞருக்கு எல்லாமுமாக இருந்தவர் அவரே.
அப்படிபட்ட மாறனின் மகனை டெல்லிக்கு அனுப்பினார் கலைஞர், ஆனால் அது கலைஞருக்கும் கட்சிக்கும் பல சிக்கல்களை கொடுத்தது
அரசியல் புரிந்தோருக்கு புரியும், டெல்லி ஒரு சகுனி அரண்மனை தமிழக அரசியலுக்கான குழப்பம் அங்குதான் தூண்டி விடபடும். அங்கு எம்பி என சென்ற பலர் பின்பு தமிழகத்தில் குழப்பம் விளைவிப்பர்
ஜெயா, வைகோ, சமீபத்திய சசிகலா புஷ்பா என ஏராளமான எடுத்துகாட்டுகள் உண்டு
அப்படி கலைஞருக்கும் சில சிக்னல்கள் புரிந்தது, அவ்வளவுதான் சாட்டையினை சுழற்றினார். மாறன் சகோதரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்
"சன் டிவி அவர்கள் பலம் அவ்வளவுதானே, நானே ஒரு டிவி தொடங்குகின்றேன், எந்த வயதிலும் தனியாக கட்சி நடத்தும் வலிமை எனக்கு உண்டு." என காட்டினார்
திமுகவில் தங்கள் இடம் வலுவானது , தாங்கள் இன்றி திமுக அசையாது என நினைத்த மாறன் குடும்பம் அரண்டது, பின் கண்கள் பனித்தாலும் இன்னும் பழைய நிலை எட்டவில்லை
இன்றும் திமுக பெரும் பலம்வாய்ந்த கட்சி, கொஞ்சம் அதிமுக சறுக்கினால் அழகாக ஆட்சியினை கைபற்றும் பலம் கொண்டிருக்கும் கட்சி
எப்படி சாத்தியம்?
கலைஞரால் சாத்தியம், அவரின் விழிப்பு அப்படி. யாரையும் கண்டு கட்சிக்குள் அவர் அஞ்சியது இல்லை. கட்சிக்கு ஆபத்து என்றால் யாரையும் அவர் களையெடுக்க தயங்கியதுமில்லை
சுருக்கமாக சொன்னால் இவன் சென்றால் கட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு அறவே இல்லை, யாரையும் நம்பி அவர் கட்சி நடத்தவில்லை, தொண்டர்களை தவிர‌
ஆனால் எம்ஜிஆர் அப்படி அல்ல‌
1980க்கு பின் அவருக்கு பெரும் சறுக்கல், அவரின் நடிக முகம் வெளுத்த்து திமுக அவரை வீழ்த்தும் நேரம் நெருங்கியது, ஜெயாவினை களமிறக்கி மக்களை திசை திருப்பபார்த்தார்
எம்ஜிஆரின் நல்ல நேரம் இந்திராவின் மரணம் அவரை காப்பாற்றியது
அதன் பின் சுதாரித்த எம்ஜிஆர் ஜெயலலிதாவினை வளரவிட அது பெரும் அஸ்திரமாக அவர் மீதே பாய்ந்தது, நடராஜன் சசிகலா ஜெயலலிதா என அடுத்தடுத்து கொடுத்த அடிகளை எம்ஜிஆரால் தாங்க முடியவில்லை
ஜெயாவினை ஓரங்கட்ட பார்த்தும் முடியவில்லை
இப்பக்கம் ஆர்.எம் வீரப்பன் கும்பல், அப்பக்கம் ஜெயா என மோதிய ஆட்டங்களில் எம்ஜிஆர் ஓய்வெடுத்தாலும் ஜெயாவினை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை அஞ்சினார்
இறுதியில் மரணம் அவரை காப்பாற்றியது
எம்ஜிஆர் என்ன? ஜெயாவே சசிகலாவிற்கு அஞ்சவில்லையா? இறுதிவரை சசிகலாவினை மீற அவரால் முடிந்ததா?
இறுதியில் அப்பல்லோவில் கூட தனியாக சாகும் அளவிற்கு வசமாக பிடியினை சசிகலாவிடம் கொடுத்திருந்தார் ஜே.
அரசியல் அப்படித்தான் மிகுந்த சுதாரிப்புகள் தேவை
டெல்லி எனும் சகுனி அரண்மனைக்கு ஜெயாவினை அனுப்பி தனக்கான குழப்பத்தை தானே அழைத்தார் எம்ஜிஆர். ஜெயா பெரும் அரசியல்வாதியான இடம் டெல்லியே
அதே டெல்லியில் கலைஞருக்கு விசுவாசமாக இருந்த முரசொலிமாறன் இடத்தை அவர் மகனுக்கு வழங்கினார் கலைஞர், ஆனால் எம்ஜிஆருக்கு வந்த சிக்கல் கலைஞருக்கும் வந்தது
கவனியுங்கள், எம்ஜிஆர் அதில் தோற்றார், அஞ்சினார் , அரட்டினார். ஒருவேளை அவர் சாகாமல் இருந்திருந்தாலும் அவர் கண்முன்னே கட்சியினை அகதளம் செய்து உடைத்திருப்பார் ஜெயா
ஆனால் கலைஞர் அஞ்சவில்லை, அசரவில்லை. செய்ய வேண்டிய காரியங்களை அழக்காக செய்தார்
வைகோ எனும் வைக்கோல் வாளை கலைஞர் மீது சில சக்திகள் வீசினாலும், பின் மாறனை கூர் தீட்ட பார்த்தாலும் மிகுந்த தந்திரத்தோடும் தைரியத்தோடும் அவைகளை தூள் தூளாக்கினார் கலைஞர்.
Image may contain: 8 people, people smiling, people standing
கொஞ்சமும் அச்சமில்லை, பதறவில்லை. யாருக்கும் எதற்காகவும் அவர் துளியும் அஞ்சியதில்லை, தைரியமாக செய்தார். அதுதான் கலைஞர்.
அதனால் ஸ்டாலின் கிட்டதட்ட தலைவரானும் கட்சியில் ஒரு சலசலப்பும் சத்தமும் இல்லை
கலைஞரை ஏன் சில இடங்களில் ஆச்சரியமாக பார்க்கின்றோம் என்றால் இப்படித்தான்.
ரசித்து பார்க்க மனிதரிடம் இப்படி ஏராள விஷயங்கள் உண்டு. அவரின் உழைப்பும் தைரியமும் அப்படி.
எம்ஜிஆர், ஜெயா என்பவர்கள் அச்சம் மிகுந்தவர்கள். அவர்களின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது
எம்ஜிஆர் யாருக்கெல்லாமோ பயந்திருக்கின்றார், ஜெயா சசிகலாவினை மீறி ஒரு அடி எடுத்து வைக்க அஞ்சியே செத்திருக்கின்றார்
கலைஞர் அப்படி யாருக்காவது அஞ்சி எங்காவது கண்டிருக்கின்றோமா?
எளிதில் யாருக்கும் வராத தைரியமும் உறுதியும் அது, எப்படி வந்தது?
ஒரு சிறிய குக்கிராமத்தில் மிகவும்பின்தங்கிய சாதியில்இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நம்பியே எழுந்து வந்தவர் அவர்.
அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவராலேயே செதுக்கபட்டது
திராவிட கொள்கைகளுக்காக அவர் அன்னாளில் போராடிய போராட்டமும் அவருக்கு வலிமையினை கொடுத்தன, அவர் வாங்கிய ஒவ்வொரு அடியும் அவருக்கு அனுபவத்தை கொடுத்தன‌
துரோகங்கள் கூட அவருக்கு பாடமாக அமைந்ததே அன்றி, அவமானமாக அவர் எடுத்ததில்லை
மிக சிறிய வயதிலிருந்தே எதிர்ப்பிலே வளர்ந்ததால் வந்த தைரியம் அது.
உண்மைதான் ஸ்டான்லி!

No comments:

Post a Comment