Tuesday, January 3, 2017

பணிந்தது போதும் நிமிர்ந்து நில்லுங்கள் பன்னீர் செல்வம்-

ஜெயலலிதாவுடன் பனிவு காட்டி யே பதவிக்கு வந்த பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு பெப்பே காட்ட ஆரம்பி த்து விட்டார்.பன்னீரை ரிசைன் செய்ய வைத்து அந்த இடத்தில் சசிகலா உட்காருவது அவ்வளவு சுலபமல்ல என்றே தெரிகிறது.
அதிமுக கட்சி தலைமை வழக்கமாக அடிமைகள் கூட்டம் முடிவு எடுக்க சசிகலாவிற்கு சுலபமாக கிடை த்து விட்டது. ஆனால் முதல்வர் பதவி அவ்வளவு சீக்கிரத்தில் சசிகலா விற்கு கிடைக்க மத்திய அரசு விட்டு விடாது என்றே தோன்றுகிறது.
பன்னீர் செல்வம் இருக்கும் வரைத்தான் மத்திய அரசின்
ஆலோசனைகள் செயல்படுத்தப்படும் என்று நினைக்கிற
மோடி அவ்வளவு சுலபத்தில் பன்னீரை பதவி விலக
விட மாட்டார்.பன்னீரும் முதல்வர் பதவியை விட்டு விட்டால் தன்னுடைய அரசியல் எதிர் காலம் அம்பேல்
தான் என்பதால் பணிந்து நின்றது போதும் துணிந்து நில்
என்று நிமிர்ந்து விடுவார் என்றே சொல்கிறார்கள்.
ஒரு வேளை பன்னீர் ராஜினாமா.செய்ய மறுத்து விட் டால் அதிமுக ஆட்சி அம்பேல் தான்.ஏனென்றால் பன் னீர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதிமுக ஆட்சியே கவிழ்ந்து விடும். உட னே சசிகலாவை பதவிஏற்க நிச்சயம் கவர்னர் அனுமதி க்க மாட்டார்.அப்புறம் என்ன தமிழகத்தில் திமுக ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு கிடைத்து விடும் என்பதால் சசிகலா பன்னீருடன் மயிலே மயிலே இறகு போடு என்று ராஜினாமாவை கொடு என்று தாஜா செய்து கொண்டிரு க்கிறார்.
பன்னீர் விடாக்கொண்டனாக பதவியை விடக்கூடாது என்பதே மத்திய அரசின் ஆலோசனை.இதற்கிடையில்
சசிகலாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு
வேறு விரைவில் வர உள்ளது.அதன் தீர்ப்பு சசிகலாவி ற்கு எதிராக வந்து விட்டால் அதோட அவருடைய அரசியல் எதிர்காலம் முடிந்து விடும். பன்னீரே நிரந்தர மாகி விடுவார்.என்றும் நிமிர்ந்தே இருப்பார்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...