Saturday, January 7, 2017

செலவில்லாத வைத்தியம் எது?

சிரிப்பு என்பது ஒரு ஆரோக்கியமான தொற்றும் நோய் என தொிவிக்கலாம். சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு இயற்கையாகவே ஆரோக்கியம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.சிரிப்பு ஆரோக்கியமான வாழ்வினைத் தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் போக்குின்றது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதால்தான் செலவில்லா எளிய மருந்து சிரிப்பு என ஆய்வுகள் தொிவிக்கின்றன. இதனால் தற்போது வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சிாிப்புக்கு முக்கியத்தும் கொடுக்கின்றாா்கள்.
மனதிற்கு சோர்வு ஏற்படும் பொழுது நகைச்சுவை நிகழ்ச்சிகளில் எம்மை இணைத்துக் கொண்டால் மனம் இலகுவாகி உற்சாகமடையும். நன்கு வாய்விட்டு சிரிக்கும் போது , மனச் சோர்வு நீங்கி, இறுகிய தசைகள் தளர்ந்து விடும்.
ஒரு முறை வாய்விட்டு சிாித்தால் சுமார் ஒரு மணி நேரம் இந்த நல்ல அதிர்வலை தொடா்ந்து இருக்கும் என ஆய்வுகள் தொிவிக்கின்றன.
மேலும் மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு மன உளைச்சல் தரும் ஹார்மோன்களின் செயற்றினைக் குறைத்து நோய் எதிர்ப்பு திசுக்களையும், சக்தியினையும் உடலில் உருவாக்கும். முலம் சிரிப்பினால் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உடலில் ஆரோக்கிய உணர்வு ஏற்படுவதுடன் உடல்வலிகளும் நீங்கும் என தொிவிக்கப்படுகின்றது
மேலும் சிரிப்பு ரத்தக் குழாய்களை நன்கு இயங்க வைத்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறையும்.
சர்க்கரை நோயாளிகளை எப்பொழுதும் டென்ஷன் இன்றி சிரிப்பும், மகிழ்ச்சியுடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...