Saturday, January 7, 2017

இதற்காகவா.............



பணத்தட்டுப்பாட்டிற்கு முன்பிருந்தே கூடிய வரை மின்னனு பணப்பரிவர்த்தனையையே செய்து வந்தேன்.
ஆனால் சில முக்கிய தேவைகளுக்கு கையிருப்பு பணம் இன்றி இப்போது தவிக்கிறேன். சென்ற மாதம் கஷ்டப்பட்டு எடுத்த 10 ஆயிரமும் PLI கட்ட post office க்கே சரியாகிவிட்டது! (டிஜிட்டல் டிஜிட்டல் என்று post office ல் கூட swiping machine வைக்காது மோசடியான ....... ஆல் தான்) சரி, கையிருப்பிற்காக சிறிது பணத்தை எடுத்து வைக்கலாம் என்று இன்று சனிக்கிழமை என்பதால் வங்கிக்கு சென்றேன்.
No automatic alt text available.
SBI வங்கியில் நீண்ட வரிசையில் நின்று ( இன்று சுமார் 200 பேர் வெயிலில் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஊரில்) 4 ஆயிரம்தான் தருகிறார்களாம்! சரி ICICI ல் ஒரு account 2012 ல் துவங்கியது இருக்கிறதே என்று பணம் எடுக்க முடியுமா? என்று வங்கிக்கு சென்று விசாரித்தேன் cheque கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் 24 ஆயிரம் தருவோம் என்றார்கள். 2012 ல் துவங்கிய account கான காசோலை எப்படியோ பத்திரமாக இதுவரை பயன்படுத்தப்படாமல் கோப்பில் இருக்க, 2 நிமிடத்தில் 24 ஆயிரம் கைக்கு வந்துவிட்டது.
இதற்காகவா! இத்தனை நாட்கள் பணம் வராத ATM வாசலிலும் குறைவாக பணம் தரும் SBI வங்கி வாசலிலும் காத்திருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...