நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?
மூன்றரை இலட்சம் கோடிகள்!
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.
சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !
இந்த விசயங்கள் உண்மையெனில் தமிழக அரசும் மற்ற கட்சிகளும் இதில் தீவிரம் காட்டி நம் பால் சந்தையினை காப்பாற்றியாக வேண்டும். இல்லையெனில் நாம் எவனுக்குமே ஓட்டுப்போட கூடாது......
No comments:
Post a Comment