Friday, March 31, 2017

இளையராஜாவின் இசைக்கு எப்போதுமே நான் அடிமைதான்! - இயக்குனர் மகேந்திரன்...!

1978ல் முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, ஜானி, நண்டு உள்பட 12 படங்களை இயக்கியிருக்கிறார். 2006ல் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சினிமாவும் நானும் என்ற பெயரில் தான் எழுதிய நூலை வெளியிட்டுள்ளார் மகேந்திரன். இந்த விழாவில் அவர் பேசுகையில், நான் இயக்கிய பல படங்களில் வசனங்கள் குறைவாக இருப்பதாக சொல்வார்கள். என்னைப்பொறுத்தவரை மெளனத்தை விட சிறந்த வார்த்தை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் வசனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதில்லை. அதேசமயம், என் படங்களுக்கான வசனங்களை இளையராஜா தனது இசையால் எழுதியிருப்பார்.
மேலும், டூயட் பாடல்கள் படத்தின் இயல்பு தன்மையை கெடுத்து விடும் என்பதால் எனது படங்களில் டூயட் பாடல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும், இளையராஜாவின் இசையை நான் ரொம்பவே ரசிப்பேன். இன்னும் சொல்லப்போனால், மனம் சோர்வாக இருக்கும்போது அவரது இசையைக்கேட்டால் உற்சாகமாகி விடுவேன். அந்த அளவுக்கு அவரது இசை ஒரு மாமருந்து என்று சொல்லும் மகேந்திரன், இளையராஜாவின் இசைக்கு அன்றும் இன்றும் நான் அடிமையாகவே இருக்கிறேன் என்கிறார்..

பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன?

🚲🛵🏍🚍🚘🚖🚌🚙🚗🚎
பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன?
பெட்ரோலியப் பொருட்களில் ஓடும் வாகனங்கள் எல்லாம் புகையை வெளிவிடும். அந்தப் புகையில் மாசுகள் /மாசுத்துகள்கள் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நாம் புகையையும் மாசுகளையும் சேர்த்து சுவாசித்துக் கொண்டிருந்த காலம் 1990கள் வரை இருந்தது. 1991இல் உலகமயமாக்கல் துவங்கியது. புதிது புதிதாக வாகனங்கள் வந்தன, நகரங்கள் கார்களின் நெரிசலால் திணறின. தில்லியில் ஆறு பேரில் ஒருவருக்கு ஆஸ்துமா என்று கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்புகள் குரல் கொடுத்தன. வாகனங்கள் வெளிவிடும் புகைக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று.
புகையைக் கட்டுப்படுத்த ஒரு தரம் வேண்டும் அல்லவா? ஐரோப்பாவில் யூரோ எனப்படும் தரம் நடைமுறையில் இருக்கிறது. அதேபோல இந்தியாவுக்கும் ஒரு தரத்தை நிர்ணயம் செய்தார்கள். அதற்குப் பெயர் Bharat stage emission standards - சுருக்கமாக Bharat Stage – BS (பிஎஸ்). 2000ஆம் ஆண்டில் பிஎஸ்-1 (BS I) என்ற தரம் வந்தது. 2001 முதல் 2005 வரை முதலில் நகரங்களுக்கும் பிறகு நாடெங்கும் என படிப்படியாக பிஎஸ்-2 (BS II) என்ற தரம் நடைமுறைக்கு வந்தது. 2005 முதல் 2010 வரை படிப்படியாக பிஎஸ்-3 (BS III) நடைமுறைக்கு வந்து விட்டது. ஏப்ரல் 2016 முதல் பிஎஸ்-4 (BS IV) முக்கியமான நகரங்களில் நடைமுறைக்கு வந்து விட்டது. ஏப்ரல் 2017 முதல் பிஎஸ்-4 நாடெங்கும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவாகி இருந்த விஷயம்.
பிஎஸ்-1க்கும் பிஎஸ்-4க்கும் என்ன வித்தியாசம்? எதற்காக இந்த பிஎஸ்-4?
ஒவ்வொரு வாகனமும் வெளிவிடும் புகையில் நைட்ரஜன், கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் டைஆக்சைடு என பலவிதமான மாசுகள் இருக்கும். அதாவது, என்ஜின் வடிவமைப்பு மற்றும் எரிபொருளின் தரத்தைப் பொறுத்து, வெளியாகும் புகையில் மாசுகளின் அளவும் வேறுபடும்.
எனவே, பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசலில் மாற்றங்களை செய்ய வேண்டும். வாகன உற்பத்தியாளர்கள் என்ஜின் மற்றும் வாகனத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தன் மூலம், வாகனத்திலிருந்து வெளியாகும் மாசுகளைக் குறைக்க வேண்டும். உதாரணமாக, பிஎஸ்-1இன்படி கார்பன் மோனாக்சைடு 2.7 முதல் 6.9 வரை இருக்கலாம்; பிஎஸ்-4இன்படி, கார்பன் மோனாக்சைடு 1.0 முதல் 2.7 வரைதான் இருக்க வேண்டும். அதாவது, ஸ்டேஜ் அதிகமாக அதிகமாக, வாகனத்திலிருந்து வரும் மாசு குறையும், வாகனத்தின் விலை அதிகரிக்கும்.
சுற்றுச்சூழலில் வாகன மாசு குறைவது நல்லதுதானே? ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த்து என்றால், அதைச் செய்வதில் என்ன தவறு?
தவறில்லை, செய்ய வேண்டும்தான். பஜாஜ் போன்ற சில நிறுவனங்கள் செய்துவிட்டன. மேலும் சில நிறுவனங்கள் அந்த வேலையை செய்து கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஒரு வாகன வடிவமைப்பில் மாற்றம் செய்வது என்பது எளிய விஷயமல்ல. டிசைன் செய்து, தயாரித்து, சோதனை செய்து, குறைகள் கண்டறிந்து, டிசைனை சரி செய்து, மீண்டும் சோதனை செய்து, மறுபடி குறைகளைக் களைந்து ........... கடைசியாக அங்கீகாரம் வாங்க வேண்டும். இதெல்லாம் அவ்வளவு சட்டென்று நடக்கிற காரியங்கள் அல்ல. அதை செய்து முடிக்கும்வரை பழைய வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடிவிட முடியாது. உற்பத்தி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும், புதிய டிசைனுக்கான வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும்.
அப்படித்தான் பிஎஸ்3 வாகனங்கள் கையிருப்பில் இருக்கின்றன. அவற்றை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு மேல் விற்பனையே செய்யக்கூடாது என்றால் ஆட்டோமொபைல் தொழில்துறை படுத்துவிடும். இன்றைய பத்திரிகைத் தகவல்களின்படி 8.24 லட்சம் வாகனங்கள் – 96 ஆயிரம் வர்த்தக வாகனங்கள், 6 லட்சம் இருசக்கர வாகனங்கள், 40 ஆயிரம் மூன்றுசக்கர வாகனங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் வாகன தொழில்துறை ஆட்டம் கண்டிருக்கிறது.
இதற்கு என்ன தீர்வு கிடைக்கக்கூடும்?
பிஎஸ்-3 தர வாகனங்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதால், கையில் இருக்கிற வாகனங்களை தள்ளுபடி விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். (காசுள்ளவர்கள் இந்தக் காற்று வீசும்போதே தூற்றிக்கொள்ளலாம்.) அப்படியும் விற்காத வாகனங்களை தமது தொழிற்சாலைகளிலும் – டீலர்களிடம் இருந்தால் டீலர்களிடமிருந்து திரும்பப் பெற்று – கூடுதல் சாதனம் எதையேனும் பொருத்தி, பிஎஸ்-4 தரத்தை அடையும் வகையும் மாற்ற வேண்டியிருக்கும். அதற்கான செலவு கையைக் கடிக்கும், அல்லது வாகனத்தின் விலையில் சேர்க்க வேண்டும். இது, இப்போது தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு. ஆனால், இனி வரும் வாகனங்களுக்கு விலை அதிகமாகும். பிஎஸ்-4 தரத்துக்கேற்ற எரிபொருளும் விலை அதிகமாகவே இருக்கும்.
அது ஒருபுறம் இருக்க, 2017 ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 வருகிறது. 2020 ஏப்ரல் முதல் பிஎஸ்-6 வரும். (இடையில் 5 எங்கே காணோம் என்று கேட்க வேண்டாம். 5 கிடையாது. 4லிருந்து நேராக 6தான்!) ஆக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பிஎஸ்-6க்கான வாகனங்களை வடிவமைத்து தயாரித்து அங்கீகாரம் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு இருக்கிறது. ஆக, அதன் காரணமாகவும் வாகனங்களின் விலை அதிகரிக்கும். அது தவிர, பெட்ரோலிய நிறுவனங்கள் பிஎஸ்-6 தரத்துக்கேற்ற எரிபொருள் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான முதலீட்டுச் செலவு, பெட்ரோலியப் பொருட்களின் விலையுயர்வில் வந்து நிற்கும்.
ஆகையால் இனி பயணத்தை திட்டமிட்டு பின் வண்டியை உபயோகித்தால் நம்மோட பெட்ரோல் செலவைக் குறைக்கலாம்..
💐💐💐

```SBI NEW RULES FROM 1st APRIL 2017

1. 3 times deposit free in your account. After more than 3 times deposit, you will pay 50/- per deposit.
2. Minimum 5000/- balance to be maintained in metro city branch account holder.
3. Minimum 3000/- balance to be maintained in city/town branch account holder.
4. Minimum 2000/- balance to be maintained in semi urban area branch account holder.
5. Minimum 1000/- balance to be maintained in villages branch account holder
6. If you do not maintain minimum amount in your account, you will pay upto Rs.200/- + extra surcharge.(depending on how many days)
7. SBI ATM free for 5 times use, after 5 times you will pay 10/- per transaction.
8. Other bank ATM free for 3 times use, after 3 times you will pay 20/- per transaction.
9. Unlimited SBI ATM use without any charges, If you maintain 25000/- in your SBI savings account.
10. Unlimited SBI & OTHER BANK ATM use without any charges, If you maintain 100000/- in your SBI savings account.
11. 15/- SMS charge you will pay after 3 months, (SMS charge free, If you maintain 25000/- in your SBI savings account)
There is a PROTEST AGAINST TRANSACTION FEES AND DECREASING RATE OF INTEREST ON OUR DEPOSITS.
Let the banks also experience the public power.
They are thieves.
Imagine:
To withdraw your own money you have to pay service charge to the Bank and you pay Service Tax on the Service Charge to the Govt.
To this end, April 06, 2017 will be a no transaction day with banks.
If they don't rollback, let's plan April 24, 25, 26, 2017 as no transaction days.
We will continue this until there is no roll back on service charges .
Keep spreading this message every 5 days to all ur FB , mails and WharsApp contacts.
It is difficult but not impossible
Otherwise banks will go on adding various new charges now and then.
This protest is for our benefit to control banks to adding new charges.
Let's come together and show the POWER OF UNITY.
Banks have started to increase transaction fee!
Service tax has gone up big time and will increase even more!
_____________________
We were taxed for earning money.
We are taxed for spending money.
We are taxed for withdrawing money.
We are taxed for depositing money.
We are taxed for service money.
We are taxed (cess)for education.
We are taxed for Swatch Bharat.
We are taxed for purchase.
We are taxed for sales.
We are taxed for manufacturing.
We are taxed for public Utility.```
In short,
*Earning is a crime.*
*Saving is a crime.*
*Spending is a crime.*
*Donating to Political Parties is the only good act.*
😡😡😡😡😡😡😡😡
PLEASE SEND TO ALL YOUR FRIENDS.

காரணம் மக்கள் ..

1 . கேரளாவுக்கும் மத்திய அரசு பிஜேபி தான் .. பிரதமர் மோடி தான் ...
2 . கேரளாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் .. நமது ஆளுங்கட்சி , எதிர்க்கட்சியை விட அதிகமாக பிஜேபியை எதிர்க்கும் கட்சி தான் ...
3 . நாம் பிஜேபிக்கு ஒரு எம்பி யாவது தந்தோம் .. கேரளா அதுவும் தரவில்லை ..
நிற்க .. இப்படி இருக்கையில்
மத்திய அரசால் கேரளாவுக்கு வராத பிரச்சனை தமிழகத்துக்கு வருவது ஏன் ?
காரணம் மக்கள் ..
அவன் டெல்லிக்கும் போக மாட்டான் ..
ரோட்டுக்கும் போக மாட்டான் ..
நேரா கவுன்சிலர் , MLA , MP சட்டையை
பிடிப்பான் .. மத்ததெல்லாம் தானா நடக்கும் !
மணல் அள்ளுறவன் , மலையை குடையறவன் எல்லாம் யாருனு நமக்கு தெரியும் .. அவனை தட்டி கேட்க மாட்டோம் .. அவ்வளவு ஏன் .. குப்பையை அல்லாத சாதாரண கவுன்சிலரை விட கேள்வி கேட்க மாட்டோம் .. காரணம் பயம் .. கேட்டா அடிப்பான் ..
தூரத்தில் இருக்கும் மோடியை பிறகு கேட்கலாம் ..
பக்கத்தில் இருக்கும் கேடிகளை முதலில் கேட்கணும் ..
அப்போ தான் தமிழகம் உருப்படும் ..

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை ‘விகல்ப்’ தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்.

ரயில்வே அமைச்சகம் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையான மாற்று ரயில் வசதி திட்டம் (ATAS) எனப்படும் 'விகல்ப்' திட்டத்தை அறிவித்துள்ளது

இந்த விகல்ப் திட்டம் மூலமாக ரயில் டிக்கெட் புக் செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ராஜ்தானி, சதாப்தி மற்றும் இதர ப்ரீமியம் அல்லது சிறப்பு மாற்று ரயில்களில் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்
இந்த விகல்ப் திட்டம் மூலமாகக் காலியாகச் செல்லும் ப்ரீமியம் ரயில் சீட்டுகளையும் அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் நிரப்ப முடியும். இப்போது இந்த முறையை ரயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளது
எனவே ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வரும் விகல்ப் திட்டம் ரயில் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்
மாற்று ரயில் வசதி திட்டமான விகல்ப் முறையை இ-டிக்கெட்கள் மூலமாக மட்டுமே பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் செய்யக் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் விகல்ப் எனப்படும் தெரிவை தேர்வு செய்ய வேண்டும்
விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்துள்ள பயணிகளுக்குத் தொடர் காத்திருப்பு இருக்கும்பட்சத்தில் சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகு டிக்கெட் உறுதி செய்யப்படும். கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது, அதே நேரம் அதிகக் கட்டணம் செலுத்திக் குறைந்த கட்டணம் ரயிலில் பயணிக்கும் பொது வித்தியாச கட்டணம் திருப்பி அளிக்கப்படும்
பயணிகள் மாற்று வசதியுடன் டிக்கெட் புக் செய்து இருந்தாலும் மாற்று ரயிலில் செல்லும் போது சாதாரணப் பயணிகளாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால் தரம் உயர்த்தும் சேவைக்குத் தகுதி உண்டு
விகல்ப் தெரிவை தேர்வு செய்து காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் சார்ட் தயார் செய்த பிறகு பிஎன்ஆர் நிலையைச் சரிபார்க்க வேண்டும். விகல்ப் திட்டம் அனைத்து ரயில்களிலும் உள்ள பெர்த்துகளைப் பயன்படுத்தவதற்காகவே என்று ரயில்வே கூறுகின்றது
அசல் ரயிலில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் கூடுதல் மாற்று வசதிகள் தேர்வு செய்திருந்தாலும் அசல் ரயிலில் பயணிக்க முடியாது. விகல்ப் திட்டம் மூலம் மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட உடன் அசல் ரயிலின் காத்திருப்புப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்
மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு டிக்கெட் ரத்து செய்தால் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு என்ன விதி முறை தற்போது உள்ளதோ அந்த முறைப் படி ரத்துச் செய்யப்பட்டுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

*புகையை பற்றிய சில உண்மைகள்.*

*இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள்.*
*(1). ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.*
*(2). ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.*
*(3). சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.*
*(4). புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*(5). எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.*
*(6). புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.*
*(7). உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.*
*(8). மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.*
*மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.*
*(9). இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.*
*(10). எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.*
*(11). ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.*
*(12). 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
*அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே*
*வாழ்க வளமுடன்*

ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது.

ருத்ரக்ஷத்தை பெண்கள் அணியலாமா? குறிப்பாக தீட்டு சமயங்களில் அணியலாமா. அபகாரியங்கள் செய்யும்போது ருத்திராக்ஷத்தை அணிந்துகொண்டு செய்யலாமா? ருத்திராக்ஷம் அணிவதால் என்ன பயன்கிட்டும்? எந்த ருத்திராக்ஷத்தை அணியவேண்டும் போன்ற உணர்வு பூர்வ சந்தேகங்களுக்கு நம் லோககுரு மஹாபெரியவா சொன்ன விளக்கத்தினை எல்லோரும் பயன்பெறும் பொருட்டு பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது.
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும்
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும்அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின்படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடுவாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும்தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும்நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியவேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால்விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிகஅதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் எனசகலமானவர்களும் அணியலாம். ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும்அடங்கிவிடும்.,
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள்ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை,கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது(அருணாசலபுராணம்) பழி, பாவம்முதலியவற்றை முழுவதுமாகத தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனிமுழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்துகொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையேருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள்தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றிருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவமஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம்அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர்மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக்கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லாநாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும்எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல்ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல்அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காக சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் -பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப்போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவேநம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலிஇவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம்அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவிஇல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதைசிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணியவேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக்கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால்மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம்கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்கசிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தைஅணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்குகஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால்யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தைஅணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்தசூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுதுஎப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோஅதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில்திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலேபோதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம்அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே.இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதைசெய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம்அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின்ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானேஉபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால்இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன்பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில்குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள்,கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம்அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும்துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும்,செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமானஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும்,ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம்அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின்ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூடருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம்கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம்இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும்கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தைசொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள்நிறைவேறும்.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஅவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூடநாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர்ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால்திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தைஅடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தைவிடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும்நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி,அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள்குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர்பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதிஎற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம்,இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களைஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும்கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர்ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால்மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹாபாக்கியம் கிடைக்கும்,.
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு,ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மதசின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமதுமதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும்நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன்விடவேண்டும்இதற்காக யாராவது நம்மைக் கேலிபேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப்பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச்சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக்காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்களசிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள்வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்தசூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார்என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும்இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.இப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ருத்திராக்ஷத்தை நாம் எப்போதும் அணிந்து நற்பயன் அடைவோம்.
ஓம் நமச்சிவாய... திருச்சிற்றம்பலம்...

Wednesday, March 29, 2017

யார் ஏகடியம் பேசினார்களோ..

பாவம் ஸ்டாலின்...
தமிழக அரசியலில் ஒரு துர்பாக்கிய தலைவர் என்றால் அது ஸ்டாலின்ஆகத்தான் இருக்கும்..
... 
எம்ஜிஆர் இருந்தவரை தகப்பனார் + மகன் அவரை பலவாறு பேசினார்கள்.
எம்ஜிஆர் இறந்தபின்னர் அவரை புகழ்ந்து பேசினால்தான் வாக்கு விழும் என்ற நிலை உருவாகி..
கடையில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசினார்கள்.
தற்போது
மேடம் இருந்தவரை அப்படியே..
தற்போது ஓபிஎஸ்சை எதிர்க்கவும்
சின்னாய்யா கும்பலை ஒதுக்கவும் மேடம் ஜெ வை. தாழ்த்தி பேசுவதை தவிர்க்கிறார் ஸ்டாலின்.
இன்னும் சில நாட்களில் அம்மாவை புகழ ஆரம்பித்து விடுவார்கள்...
ஆக...
யார் ஏகடியம் பேசினார்களோ..
அவர்களே தங்களை புகழும் வண்ணம் வாழ்ந்து சென்றுவிட்டார்கள்
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும்....

ராசியும் லக்னமும் ஒன்றாக அமையப்பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?

✜ மனிதர்களுக்கு எப்படி விதவிதமான குணங்கள் இருக்கின்றதோ, அதேபோல நவகிரகங்களுக்கும் விதவிதமான குணங்கள் உண்டு.
✜ ஜாதகக் கட்டத்தில் ஒரு சிலருக்கு ராசியும் லக்னமும் அபூர்வமாக ஒன்றாக அமைந்து விடும். ஆன்மிக ரீதியாக மனித குணங்களை சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகைகளாக ஆன்றோர்கள் பிரிக்கிறார்கள். சாத்விகம் என்பது தெய்வீக குணம், ராஜஸம் என்பது மனித குணம், தாமஸம் என்பதை அசுர குணம்.
✜ சாத்விக குணம் உள்ளவர்கள், எந்தவித சூழ்நிலையிலும் நீதி, நேர்மை தவறாமல் தர்மத்தின் வழி நடப்பார்கள். இது தெய்விக குணத்தைக் குறிப்பிடுகிறது.
✜ ராஜஸ குணம் உள்ளவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னையும் தன் மன நிலைக்கு ஏற்றவாறு தன் குணத்தையும் மாற்றிக்கொண்டு வாழ்வார்கள்.
✜ தாமஸ குணம் உள்ளவர்கள் கபடம், சூது, வஞ்சம், பொறாமை, பொய், சூழ்ச்சி, பிறரை இம்சை செய்து அதில் சுகம் காண்பது போன்ற கெட்ட குணங்களுடன் இருப்பார்கள். இது அசுர குணம் எனப்படும்.
குணங்களுக்குரிய கிரகங்கள் :
❖ சந்திரன், குரு, புதன் - சாத்விகம் - தெய்விக குணம்
❖ சுக்கிரன், சூரியன், செவ்வாய் - ராஜஸம் - மனித குணம்
❖ சனி, ராகு, கேது - தாமஸம் - அரக்க குணம்
✫ ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறாரோ அந்த நட்சத்திரத்துக்குரிய கிரகத்தின் குணங்களே அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு ராசியின் குணம் இருக்கும். இன்னும் சிலருக்கு லக்னத்தின் குணம் இருக்கும். ஆனால், அபூர்வமாக ராசியும் லக்னமும் ஒன்றாக அமையப்பெற்றவர்களின் குணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.
விசேஷ குணங்கள் :
➽ கடந்த காலத்தைவிட எதிர்கால கணக்குகள் அதிகம் போட்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.
➽ எதிரியை உடனே மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பழி வாங்கும் உணர்வு குறையாது.
➽ தான் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் ஒருபோதும் பின் வாங்க மாட்டார்கள். பொறுமையாகக் காத்திருந்து சமயம் பார்த்து இலக்கை அடைவார்கள்.
➽ 'தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வரிகளின் கதாநாயகர்கள் இவர்கள்தான். தங்களுக்கு வரும் நல்லதுக்கும் கெடுதலுக்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள்.
➽ பொறாமை குணம் இருக்காது. எதைக் கண்டும் சலனம் இன்றி அமைதியாக, இருப்பார்கள்.
➽ இனிமையாகப் பேசினாலும், மற்றவர்களை கவரத் தெரியாதவர்கள். இதனால் பல வாய்ப்புகளை இழப்பார்கள்.
➽ நண்பர்களும் சரி, சொந்த பந்தங்களும் சரி இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள்தான் ஹீரோ.
✫ இராசியும் லக்னமும் ஒன்றாகப் பெற்றவர்களின் குணங்கள் சாத்விகத் தன்மையே பெற்று இருக்கும். எந்த ராசி, லக்னமாக இருந்தாலும் சரி, குறிப்பாக பிறருக்கு உதவி செய்து உயர்வு காணும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
R.K. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – வை.கோ
பி.பி.சி. முக்கிய செய்தி
தமிழக இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று வை.கோ தெரிவித்துள்ளார். இதனால் உலகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது, இதனால் உலகத்தில் வெப்பம் அதிகமாக ஏற்பட்டு அண்டார்டிகாவில் பனி பாறைகள் உருகி கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்து, ஐரோப்ப்பாவில் சில நாடுககள் மூழ்கும் அபாயம் எற்பட்டு உள்ளது. வை.கோ.வின் இந்த முடிவால் ஈரானும், வடகொரியாவும் அணு ஆயுத சொதனையில் மும்முரமாக ஈடுட்டு உள்ளன. இது கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் ”டோனால்டு ட்ரம்ப்ட்” வை.கோ.வுடன் தொலைப்பேசியில் தொடர்பு கோண்டு, “உங்கள் முடிவை மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கோண்டர், அதற்கு வை.கோ. “மறுபரிசிலனை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளைமாளிகை சோகத்தில் மூழ்கி உள்ளது. வை.கோ.வின் இந்த முடிவால் ரஷ்ய சனி கிரகத்தில் தனது ராக்கெட்டை தரை இறக்கும் முடிவை தள்ளி வைத்துள்ளது இது தொடர்பாக, ரஷ்ய விண்வெளி நிலைய செய்தி தொடர்பாளர் மாஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பில் “ வை.கோ. இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னதால் இங்கு இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர், இந்த சூழ்நிலையில் ராக்கெட்டை சனி கிரகத்தில் இறக்குவது என்பது இயலாத காரியம் என்பதால். இந்த நிகழ்வை ஆர்.கே. ந்கர் இடைத்தேர்தல் முடிந்த உடன் வைத்துக்கோள்ளலாம் என்று முடிவு செய்து உள்ளோம். என்று கூறினார். வை.கோ.வின் இந்த அதிரடி முடிவால் அமெரிக்க – ரஷ்ய பனி போர் உச்சத்தை அடைந்து உள்ள்து வை.கோ. இந்த முடிவை எடுத்ததற்கு அமெரிகாவின் உள்வுத்துறைதான் காரணம் என்று ரஷ்யாவும், ரஷ்ய உளவுத்துறைதான் காரணம் என்று அமெரிககாவும் ஒருவருக்கோருவர் குற்றம் சாட்டி வருவதால் முன்றாம் உலகப்போர் வந்து விடுமோ என்று உலகமே அச்சத்தில் ஆழ்ந்து உள்ளது, இதனால் ஐ.நா. சபைத்தலைவர் வை.கோ.வுகு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் “ தாங்கள் தயவு செய்து தமிழக இடைத்தேர்தல் நேரடையாக நில்லுங்கள் இல்லை என்றால் யாருக்காவது ஆதரவாவது தெரிவித்து அமெரிக்க – ரஷ்ய பதற்றத்தை தணித்து உலகத்தில் மூன்றாம் உலகப்போர் வராமல் தடுக்க உதவுங்கள்” என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கோண்டு உள்ளார்.
😝😝😝😝

ஒரு குட்டி கதை:-

ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர்
முன்
தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10
முறையும் நீ
நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில்
முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்,
'அந்தபட்டம் தன் கைக்கு வர
வேண்டும்,
அந்தபெண்
வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது, 7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன்
நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3
வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான்
உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல்
வரமாக
"எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட
போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர், "10
வாய்ப்புகள்
தருவதாக சொல்லி
7 வாய்ப்புகள் தான்
தந்தாய்,
8வது வாய்ப்பை பயன்படுத்தியும்
பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ
ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
-
-
கடவுள் பொறுமையாக,
"நீ மட்டும் 10
ரூபாய்க்கு கார்டு போட்டா 7
ரூபாய்க்கு தான பேச விடுற?
அது மாதிரி தான்
இதுவும்,
3 வரம்
சர்விஸ்சார்ஜ்.
யாரங்கே��������
இவனை நரகத்தில் தள்ளுங்கள்"
என்றார்.....😀😀😀😀😀

#ஸ்ரீரங்கம் ( 7) இன் #சிறப்பு........!!!

1. #ஏழு_உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
2. #7பெருமை உடைய
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
 (4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு #7நாச்சிமார்கள்
(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.
4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு #7_முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.
5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு #ஏழு_முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் #7ம்_திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் #ஏழாம்_திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
8. தமிழ் மாதங்களில் #ஏழாவது_மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் #7வது_அவதாரமாகும்.
10. இராப்பத்து #7ம்ம்_திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு #ஏழு_உற்சவங்கள் நடைபெறும்.
(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் #7_சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்
13. #இராப்பத்து_7ம்_திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் #7_கோபுரங்கள் உள்ளன.
(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-I
(6) தெற்கு கட்டை கோபுரம்-II
(7) ராஜகோபுரம்.
15. #ஏழு_உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
(1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ர உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.
16. #ஏழு_சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்.

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

வடநாட்டில் இஸ்லாமியர் ஆக்கிரமித்த அயோத்தி இராமர் பற்றித்தான் சிந்திக்கிறோம்
தென் நாட்டில் வேளாங்கன்னியில் கிருஷ்தவ மிஷனரிகளின் பித்தலாட்டத்தை யாரும் கேள்வி கேள்வி கேட்பதே இல்லை ஏன்?
வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பது போல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.
தமிழ் சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)
சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.
”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜனாக்ஷி]; கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’. சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.
“வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண் பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? உலகம் உய்ய ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன். இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.
“மானெடுங்கண்ணி” என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்.
’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’
இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும்.
கடற்கரைச் சிவாலயங்கள்:
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.
”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”
என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசிமகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வருகிறது.
கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் – திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.
மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.
திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி
திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி
திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.
சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
– திருஞானசம்பந்தர்
நாகூர் – நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.
நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்துதித்த அதிபத்த நாயனார் வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.
முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.
இது போன்ற ஒரு கடல் தலம் தான் வேளாங்கண்ணியும்.
இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.
சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர். அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும்.
‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூட அங்கு தடை இருந்தது.
கிறித்தவ மிஷநரிகளின் கலாசாரத் திருட்டு:
காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷநரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
உமையன்னைக்கே உரியது ‘பெரிய நாயகி’ எனும் நாமம். புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில், இறைவன் பெயர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்), இறைவி பெயர் பிரகன்னாயகி (பெரிய நாயகி) என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பெயரை வெட்கமில்லாமல் களவாடி, ‘பெரியநாயகி மாதா’ எனக் கிறித்தவ மிஷநரிகள் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.
உண்மை சுடும் . கிறித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்தபட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
சில கேள்விகள்:
வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலை நிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன
.
’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ? விவிலிய ஆதாரம் உள்ளதா ?
இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்? போர்த்துகீசிய மாலுமிகளா, வாத்திகனில் உள்ள போப்பரசரா அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா?
ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?
திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?
இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?
ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?
வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ?
ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ?
வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?
லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?
பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத் தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ?
அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?
இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்?
மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை.
1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும்.

சசிகலா அணியின் சட்ட , அரசியல் ஆலோசகர் CIA சுப்பிரமணியன் சாமி.

மத்திய அமைச்சர்கள் சிலர் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர். ஆனால் நான் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என நான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஸஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியில் 50 கோடி ரூபாய் பணத்தை இறக்க அரசியல் கட்சிகள் தயாராக இருப்பதாக மாநில உளவு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்
1,95,146 - இது 2016 பொதுதேர்தலின் போது ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை. இது இப்போது 2,62,721 ஆக கூடியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களின் போதெல்லாம் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடவில்லை. இது ஆளுங்கட்சிக்கு சாதகமாகக் கூடப் போகலாம். கேட்டால் அடிக்கடி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் வருவதால் நிறைய மக்கள் தொகுதி மாறி இங்கே வந்துவிட்டார்கள் என்றுகூட சொல்வார்கள்! டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சொல்லியிருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால் ... நீங்கள் அரசியல் ஞானம் உள்ளவர்தான்.!!!

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் :



நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
Image may contain: food
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

சுவிட்சர்லாந்தில் நடந்த இரண்டு அதிசயம் !

“நீங்க சும்மா இருந்தால் போதும்,மாதம் 1,72,000 ரூபாய் உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தால் எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்கிறதல்லவா?, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.

1.ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும்.
2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும்.
3.சுவிஸ்சில் 5வருடமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி மற்றும் குட்டிப்பாப்பா இருந்தால் அந்த குடும்பத்திற்கு “அடிப்படை” ஊதியமாக மாதம் 3,95,000 அரசாங்கம் வழங்கும்.( சிவாஜில ரஜினி சொல்ற மாதிரி அவங்க ‘சும்மா இருந்தா மட்டும் போதும்’)
இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்தியது, அந்த வாக்கெடுப்பின் முடிவு உலகையே மற்றுமொரு முறை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
5ல் 4ங்கு பேர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.78% சதவீதம் பேர் “சுவிஸ்” அரசின் ‘அடிப்படை’ ஊதியம் எங்களுக்கு வேண்டாம் என்று தங்கள் முடிவை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுக்கும் அவர்கள் சொல்லும் காரணம் இன்னமும் வியப்பாகவுள்ளது.
1.இந்த அறிவிப்பை கேட்டு , இன்னும் சில வருடங்களில் கோடி கணக்கான அந்நியநாட்டு மக்கள் எங்கள் நாட்டில் சட்டரீதியாகவும்,சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.
2.இந்த அடிப்படை ஊதிய சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.
3.அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.
இது சரித்திரத்தில் எழுதவேண்டிய நாள், ஸ்விஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.
நாம் இன்னமும் தமிழ், சேர,சோழ, பாண்டியர்கள், என்று பழையபெருமையை வெட்கமில்லாமல் பாடிக்கொண்டு கிடைக்கும் 100, 500, 2000 ரூபாய்க்கும் சொல்ற கட்சிக்கு கண்ண மூடிக்கொண்டு ‘ஓட்ட’ப் போட்டுட்டு, இலவசமா ‘பினாயில்’ குடுத்தா கூட போட்டிப்போட்டு வாங்கி குடிக்கிறோம்.
இதுல எதுக்கு எடுத்தாலும் ஒரு பஞ்ச் டயலாக் வேற “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி”னு அநேகமா இந்த வரியை உச்சரிக்கும் கடைசி சந்ததி நாமகத்தான் இருக்கும், நம் அடுத்த சந்ததி நம்மை நினைத்து நிச்சயம் பெருமைபட மாட்டாங்க.
நம்மைப் போல் சுவிஸ் நாட்டிற்கென்று பல பழம் பெருமைகள் இல்லாமல் இருந்தி ருக்கலாம், ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர் காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்காலப் பெருமையை.
வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே !

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...